பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் இளமையும் கல்விப் பயிற்சியும். பொய்யாது அளிக்கும் வையைப் பாயப்பெற்ற வளம் பொருந்திய பாண்டிமா நாட்டில் திருவாத ஆர் என்னும் உயரிய பதியொன்றுண்டு. அப்பதியில் நெல்வளம் பெற்ற காராளர் எனப்படும் வேளாள ரும் தோலாநாவின் மேலோராய நான்மறை அந்தணரும் மல்கியுளர். அவ்வூரில் சிறந்த சிவாலய மொன்று இருக்கின்றது. அங்கு வாழ்ந்த குடிகள் நாற்றமிழை நன்கு அறிந்தவர்கள். - பெருமையுற்ற அவ்வாதவூரில் கடைச்சங்க காலத்தில் கபிலர் என்ற ஒருவர் அந்தணர் மரபில் தோன்றினார். அவர் இளமையில் ஒரு நல்லா சிரியரை அடைந்து, அவர் காலத்து விளக்க, முற்றிருந்த தொல்காப்பியம். முதலான இலக்கண நூல்களையும் இலக்கிய நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். அங்ங்னம் கல்வி கற்ற புலவர் தமிழில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை எனப் பேராற்றல் வாய்ந்து விளங்கின்ார்.