பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நாற்பெரும் புலவர்கள் பீடுமிக்க மாடமதுரையில் சங்கமொன்றை நிறு வித் தமிழறிஞர் பலர் குழுமித் தமிழ்ஆராய்வதைப் புலவர் உணர்ந்தார்; தம் பதியை விட்டுப் புறப் பட்டு மதுரை மாநகரை அடைந்தார்; அடைந்து, தம் ஆற்றலை மதுரைச் சங்கப் புலவர்கட்குக் காட்டினர்; அவர்கள் கபிலரது தமிழாற்றலை உணர்ந்து, அவரைத்தம் கூட்டத்திற் சேர்த்துச் கொண்டனர். எனவே, கபிலர் பெருமான் கடைக் சங்கப் புலவராக விளங்கினர். அவர் காலத்தில் அவரைப் போல் மிக்க மேம்பாடும் பேராற்றலும் வாய்ந்தவர் பரணர், சீத்தலைச் சாத்தனார். நக்கீரர் என்ற பெருமக்களே ஆவார். இப் புலவர்களோடு கபிலர். தமிழாராய்ந்து, அம்மொழியினைப் பெருக்கிக் கொண்டு அரசர் களை அன்புறப் பாடிக்கொண்டும் காலங் கழித்து வந்தார். - கபிலரும் சேரனும் கடைச்சங்க நாளில் சேரநாட்டின் ஒரு பகுதி யைச் செலவக் கடுங்கே வாழியாதன் என்பவன் ஆண்டு வந்தான். இவன் சிறந்த வீரன்; தமிழ் மொழியில் அதிகப் பற்றுள்ளவன்; புலவர்களைப் பெரிதும் ஆதரிப்பவன். இவனது இல்லம் புலவர்கட்கு தாய் வீடு போன்றது; யார் எதை விரும்பி வரினும் அவர் விரும்பியவற்றை சத்துவக் கும் செல்வன். அதனால் இவன் பெருமை தமிழ் நாடெங்கும் பரவியது.