பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. நாற்பெரும் புலவர்கள் எங்ங்னம் ஒப்பை" என்ற கருத்தைக் கொண்ட் செந்தமிழ்ப் பா ஒன்றினைப் பாடியுள்ளார். ஒருகால் சேரமான் கபிலர் கையைப் பற்றி, "கவியரசே! நும் கை மெல்லியதாயிருக்கக் காரணம் என்ன?" என்று வினவினான். கபிலர் அரசனைப் புன்முறுவலோடு நோக்கி, "புவியரசே! நீ, வன்கண்மையையுடைய கொலையானையாலே காவலைக் கொண்ட கணைய மரத்தை முறிப்பை, இரும்பாற் செய்யப்பட்ட அழகு செய்த அங்குசத் தால் முன்னர்க் கடாவி, அது செய்ய வேண்டிய வேலையைப் பின் வேண்டுமளவிலே பிடிப்பை; வலிய நிலத்தைக் குந்தாலியால் இடித்துச் செய்த குழிந்த கிடங்கின் கண் நீர் அதிகமாயிருத்தலை அறிந்து, அதன்கட் செல்லாது மிக்க செல்வினை யுடைய குதிரையைக் குசைதாங்கி வேண்டு மளவிலே பிடிப்பை அம்பறாத் துாணி பொருந்திய முதுகை உடையைய்ர்ய்த் தேர்மீது நின்று வில்லி னது வலிய நாணாற் பிறந்த வடுப் பொருந்தும் படி அம்பைச் செலுத்துவை: பரிசிலர்க்குப் பெறு தற்கரிய அணிகல்ங்களை அளிப்பை; இக்காரியங், கட்கு, நின் முழந்தாளைப் பொருந்திய பெரிய கைகள் வலிவுற்றிருக்க வேண்டும்; அவை அங்ங்னமே வலி பெற்றிருக்கின்றன. பரந்த மார்பினையும் நிலம் போன்ற வலியினையும் உடைய அரசே! நினைப்பாடுவாருடைய கைகள், ஊனையும் துவையலையும் கறியையும் சோற்றை யும் உண்ண உதவுகின்றனவேயன்றி வேறு,