பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் 恕龙 செயலறியா ஆதலின், அவை மெல்லிய ஆயின. பெரும!” என்று விடை பகர்ந்தார்; இவ்விடை யால் சேரமான், பகைவர் நாட்டை அழிக்கும் விதத்தையும் அவன் கைவண்மையையும் நன் கெடுத்துக் கூறினார். - - சேரமான், புலவர் கூற்றைக் கேட்டு உள்ளம் பூரித்தான் தன் அரண்மனையில் பல நாள் புலவரை வைத்தாதரித்தான். பின்னர்ப் புலவர் அவனிடம் வேண்டும் பரிசிலைப் பெற்று மதுரை யம்பதியை அடைந்தார். - . - வேள்-மாரி அக்காலத்தில் கடையெழு வள்ள்ல்களில் வேன் பாரி என்று ஒருவன் இருந்தனன். இவன் நற்குண நற்செயல்கள் வாய்ந்தவன்; குடிகளை அன்போ டும் அருளோடும் காத்து வந்தனன், இரப் போரைக் காணச் சகியான். இவனைப் பாடாத புலவர் இல்லை; சுந்தர மூர்த்தியாரும் தமது தேவாரத்தில் "கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினுங் கொடுப்பாரிலை" என்று கூறி யுள்ளார். கொடையிற் சிறந்து விளங்கிய வள்ளல்கள் பலர் அக்காலத்தில் இருந்தும், அப் பெரியார் பாரியை உதாரணமாகக் காட்டின மையால் இவன் அக்காலத்து ஏனை வள்ளல்களி' |லும் மேம்பட்டவன் என்பது வெள்ளிடை மலை.