பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நாற்பெரும் புலவர்கள் தோழராகக் கொண்டனர். பாரியும் கபிலரைத் தன் அவைப் புலவராகக் கொண்டனன்; தன் அருமைப் பெண்களான அங்கவை, சங்கவை என்ப வர்களைக் கபிலரைக் கொண்டு கல்வி கற்கச் செய் தான். செம்மொழிப் புலமை வாய்ந்த கபிலர் அம் மகளிரைப் பெரும் புலவ்ர்களாகச் செய்து விட் .டனர். - பாரியின் நற்குண நற்செயல்கள் கபில்ரைக் களிப்புறச் செய்தன. அவர் அவ்வப்போது அவனைப் புகழ்ந்து பாடுவதுண்டு. அவர் ஒருகால் பாரியினது வள்ளன்மையைப் புகழ்பவராய், "நல்லனவென்றும் தீயனவென்றும் கூறப்படுவன சூடும் மலர்கள்; அவை இரண்டினும் வேறான எருக்கம் பூவாயினும் ஒருவனுடையனவற். றைத் தெய்வங்கள் விரும்பேமென்னா. அதுபோல, அறிவற்றவரும் அற்பகுணமுடையாரும் சென்றா லும் பாரி, அவர்கட்கு பொருள் ஈதலில் தவறான்' என்றும், "இவ்வுலகத்தைக் காப்பதற்கு மாரியுண்டு. அங்ங்ணம் இருக்க, செவ்விய புலமை வாய்ந்த அறிவுடையோர் பாரி, பாரி' என்று சொல்லி அவனது பல புகழை வாழ்த்தி, அவ்வொருவனையே புகழ்கின்றனரே!"என்று தமக்குள் கூறிப் பாரியைப் பாராட்டினார். மேலும் அவர், பறம்பு நாட்டில் மிக்குள்ள மரங்கள் சந்தன மரங்கள். அவ்ற்றைக் குறத்தியர் எரிக்கின்றனர். அதனால் உண்டாகும் புகை அருகேயுள்ள வேங்கை மரத்திற்