பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர். 39 - களில் நம் கபிலரும் ஒருவராவர். அவர் நேரே அரண்மனைக்குச் சென்றார்; அங்குப் பேகனைக் காண்பதற்குப் பதிலாக, கைவளை சோர்ந்தும், கண்கள் குழிந்தும், மதி ஒத்த முகம் வாடியும், குழல் அவிழ்ந்தும் சோர்ந்து நின்ற கண்ணகியைக் கண்டார்; விஷயத்தை உணர்ந்தன்ர். உடனே புலவர் பேகனிடம் ஒடோடியும் சென்றார்; அவன் பரத்தையோடு வாழ்வதைக் காணச் சகியாத புலவர் அவனைக் கண்ணுற்று, - குறமக்கள், மலையை மழை வந்து, சூழ்க’ என்று மிக்க பலியைத் தூவுவர்; அம்மழை மிகுதி யாகப் பெய்தலால் அப்பெயல் அமைந்த முகில் மேலே போக வேண்டுமெனத் தெய்வத்தைப் போற்றுவர். மழை பெய்த களிப்பால் உவகை கொண்டு மலைச் சாரலின் கண் புனத்தினையை உண்ணுவர். அத்தகை மக்களையுடைய நாட்டைஉடையோய்! சினத்தினாற் செய்யும் போரையும் கைவண்மை யாற் கொடுக்கும் கொடையினையும் உடையாய்! விரைந்த குதிரையைப் பெற்ற பேக! சுரத்தின் கண்ணே நடந்து வருந்திய எனது சுற்றம் பசியால் வாடியது. அதனால், கடிப்பு அறையப்பட்ட முரசு போல ஒலிக்கப்பட்ட அருவியையுடைய பெரிய உயர்ந்த மலையின் கண் சிறிய ஊராகிய நினது அரண்மனை வாயிற் கண்ணே வந்து தோன்றி, வாழ்த்தி நின்று நின்னையும் நின் மனையையும் பாடினேன். அப்போது இன்னாதாகச் சொரியப்