பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 நாற்பெரும் புலவர்கள் கவர்மீது நின்று முற்றுகை இட்டிருந்த மூவேந்த ரையும் நோக்கி, தமிழ் வேந்தீர்! பாரியினது. அரணை வீணே முற்றுகையிட்டுச் சலித்தீர். அவனது பறம்பு இரங்கத்தக்கது. அஃது உழவ ரால் உழுது விளைக்கப்படாத நான்கு விளைவு" களை உடையது. அவற்றுள் முதலாவது, சிறிய இலையையுடைய மூங்கில் நெல் விளையும்; இரண் டாவது, இனிய சுளையுடைய பலாவினது பழம் ஊழ்க்கும்; மூன்றாவது, கொழுவிய கொடியை யுடைய வள்ளிக்கிழங்கு தாழவிருக்கும்; நான் காவது, இம்மலையரணில் தேன் மிக்குள்ளது. பாரியினது பறம்பு மலை அகல நீள உயரத்தால் வானிடத்தை ஒக்கும். இத்தகைய வளங்களைப் பெற்ற பரம்பு மலையில் உள்ள பாரிவேளை நீவிர் வெல்லுதல் எளிதன்று. பெருமையைக் கொண்ட முரசினையுடைய நீவிர் மூவேந்தரும் முற்றுகை யிடினும், மிகுந்த யானைப்படை தேர்ப்படை உடையீராயினும், உங்கள் முயற்சியால் இம்மலை யரணைக் கொள்ளமாட்டீர். நுமது வாள் வலி யால் எம்மரசன் தளரான். அதனை யான் நன்கு உணருவேன். யாழை வாசித்து நும் விறலியர் பின்வர ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் நீவிர் அவனிடம் செல்லின், அவன் உங்கட்கு. நாட்டையும் பரிசிலாகத் தருவன். - அவ்வாறு செய்யாது எத்துணைக் காலம் முற்றுகை இட்டிருப்பினும் பயன் பெற மாட்டீர். மீண்டும் கூறுவேன் கேளும். இப்பறம்பு நாடு