பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் 43 முந்நூறு ஊர்களை உடையது. இது குளிர்ந்த நல்ல நாடு; அம் முந்நூறு ஊர்களையும் பரிசிலர். பாடிப் ப்ெற்றனர். அப் பரிசிலர் போன்று நீவிரும் பாடுiராயின், உமக்குப் பறம்பு மலை அன்றிப் பாரியும் நாமும் உள்ளோம்," என்று பாரியது வள்ளன்மையையும் மலைநாட்டு வளத்தையும் கூறி முடித்தனர். புலவர் கூறியவை உண்மை எனவே மூவேந் தரும் உணர்ந்தனர்; ஆயினும், பாரியை எவ் வாற்றாலும் கொல்ல வேண்டும் என்று துணிவு கொண்டனர்; தங்களிடம் குடி கொண்டிருந்த, பொறாமை காரணமாக, ஏதோ ஒரு சூழ்ச்சி செய்து பாரியைக் கொன்று விட்டனர். இரவ லர்க்கு இனியவனாய் விளங்கிய பாரிவேள், அறிவிழந்து பொறாமையின் வயப்பட்ட மூவேந்த ரால் மாண்டதைக் கண்ட அவனது ஆருயிர் மனையாள் உயிர் நீத்தார். கபிலர் புலம்பல் பாரிக்கு உயிர் நண்பரான கபிலர், தமது நண்பனும் கொடை வள்ளலுமான பாரிவேள் உயிர் நீத்ததைக் கண்டு பெரிதும் வருந்தினார். அவர் அவனது புகழைக் கூறிப் புலம்புபவராய், "அழகிய பாரிவேளது பறம்புமலையில் உண்டாகும் தேறல் பாரி போன்று இனிமையானது; அவன் இறந்ததால் அது கழிந்தது; பறம்பு நாட்டு மகளிர் மிக்க அழகுடையவர்கள்; குளிர்ந்த கண்ணை