பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 44 நாற்பெரும் புலவர்கள் யுடையவர்கள்; இனிய முறுவலை உடையவர்கள்; நெடுவரை ஏறி முன்பு வேந்தனது கலிமாவை எண்ணுவர்; எம் வேந்தன் இறந்து பட்ட இப்போது ஈத்திலைக் குப்டையேறி உமண்ர், உப்பு செலுத்தும் சகடத்தை எண்ணுவர். நோவேன், யான், என் வாழ் நாட்கள் கெடுவதாக; புது வருவாய் இடையறாது வரும் அகன்ற நாடு பகைவர் கொள்ளலாயிற்றே! 'சனிமீன் புகைகளோடு கூடிப் புகைந்தாலும், எல்லாத் திசைகளிலும் புகை தோன்றினும் தென்றிசைக் கண்ணே வெள்ளி'போக்கு உறினும், பாரிவேளது நாட்டு, வளம் வ்ற்றாது, வயல்களில் விளைவு அதிகமாக உண்டாகும்; புட்பங்கள் அலரும்; பெண்கள் வருத்தம் இன்றிக் குழவிகளை ஈனுவார்கள், மழை ஒரு போதும் அந்நாட்டில் பிழையாது. பாரியது வள்ளன்மையன்றோ இவற் றிற்குக் காரணம் இத்தகைய மன்னன் மாண்ட னனே! எட்டாம் பக்கத்துப் பிறை போலும் வளைந்த கரைகளையும் தெளிந்த நீரையும் உடைய சிறிய குளம் பாதுகாப்பார் இல்லாமை யால் உடைந்துவிடும் போலும்! - கூரிய வேலையும் திரண்ட தோளையும் உடைய பாரிவேளது குளிர்ந்த பறம்பு நாடு இனிச் சீர்கெட வேண்டுவதே. பாரியின் பெருமையை யான் என்னென்று இயம்புவேன்! நிழல் இல்லாத நெடிய வழியில் நின்ற தனிமரம் போல முரசை யுடைய அரசரினும் மிகுந்து இரவலர்க்கு வழங்கும்