பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் 47 கோவே, மிக்க விளை தலையுடைய நாட்டை உடையோய்! போரில் பகை வேந்தரது மிடுக்கை அடக்குபவனே! இம் மகளிர், கொடி முல்லை தன்னை நாத்தழும் பேறப் பாடாதிருந்தும், மணிகள் ஒலிக்கும் நெடிய தேரைக் கொள்க’ என்று சொல்லிக் கொடுத்த வள்ளன்மையிற் சிறந்த பாரிவேள் பெண்கள். யான் பரிசிலன்; அது வன்றியும் நிலைபெற்ற அந்தணன். நீயோ பகை வரைப் போர் செய்யும் முறைமையாற் பொருது தாழ்விக்கும். மேன்மையுடையோன். ஆனால் நினக்கு யான் தருவதைக் கொள்வாயாக" என்றார். பாரி மகளிரைத் தன்னை மணஞ்செய்து கொள்ளுமாறு புலவர் வேண்டினர் என்பதை இள விச்சிக்கோ உணர்ந்தான்; மூவேந்தர்க்கும் பகைவ னான பாரியின் மகளிரைத் தான் மணப்பின் அதனால் என்ன தீமை விளையுமோ எனப் பயந் தான். அவ்வேள் கபிலரை நோக்கி, 'புல வீர்! இப் பெண்மணிகளை யான் மணந்துகொள்ள இயலாத நிலையில் உள்ளேன்” என்று உறுதியாய் உரைத் தான். - கபிலர், அம்மகளிரை அழைத்துக்கொண்டு கொடையாளிகளுள் ஒருவனான இருங்கோவேள் என்பவனை அட்ைந்தார்; அடைந்து அவனை. நோக்கி, "மாலையை அணிந்த யானையுடைய இருங்கோவே! நீ வள்ளன்மையிற் சிறந்து நாற்பத் தொன்பது தலை முறை த்ொன்று தொட்டு வந்த