பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் 49 கழாத்தலையார் என்பவரை அவமதித்தான். அது காரணமாக, வெற்றி நிலை பெற்றுச் சிறந்த புக ழோடு இருந்த சிற்றரையம், பேரரையம்' என்னும் அவனது நாடு கேடுற்றது. என் வார்த்தையை நீ அவமதிக்கலாகாது பெரிய மலையிடத்து ஊர் களையுடைய நாட்டை உடையோய்! யான் நின்னை விடை கொண்டேன்' என்று கூறி அகன்றார். . பின்னர்ப் புலவர் சங்கவை அங்கவை என்ற அப்பெண்கள் இருவரையும் அழைத்துச் சென்று திருக்கோவலூரைத் தலை நகராகக் கொண்டு அரசாண்டு வந்த மலையனை அடைந்தார். அவன் சிறந்த அரசன், வென்றி மிக்கோன். அவன் பாரி யினது பரந்த புகழைக் கேள்விப்பட்டிருந்தான். ஆதலின், அவன் பாரியினுடைய மூத்த மகளான சங்கவை எனபாளை மணந்து கொண்டான். அதன் பிறகு, கபிலர் இளையளான அங்கவை: என்பாளைப் பார்ப்பார் சிலரது பாதுகாவலில் வைத்தார்; வைத்த பின்னர், பாரிவேளது பிரி வாற்றாது உயிரைவிடத் தீர்மானித்தார்; ஆனால் தாம் இறப்பதற்குள் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கண்டு வரவேண்டுமென்று விருப் பங்கொண்டு, சேர நாட்டை நோக்கி நடந்தார். - ஏழாம் பத்தைப் பாடியது சேர நாட்டை அடைந்த கபிலர் சேரனைப் புகழ்ந்து பத்துப் பாடல்களைப் பாடினார். அம். அபாட்டுக்களின் சுருக்கம் வருமாறு: - நா-4