பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் - - - 5夏 கூர்ந்தனை. செல்வக் கோவே சேரலர் மருகனே! வாழியாதனே! நின் குணங்கள் இவ்வாறாகிய அதனாலே உலகம் செய்த நன்று உண்டெனின், நீ பல ஆம்பலாகிய ஆயிர வெள்ள ஆழி வாழ்க! உலகத்தில் பல திறப்பட்ட அரசர் உளர். அவர் அரசராவரோ? அரசர்க்குரிய உயரிய குணங்களை அன்னவர் பெற்றிலரே! புலவர்களை ஆதரிப்ப தில்லை; மொழியினை வளர்ப்பதில்லை; நற்குணங் களில்லை; நற் செயல்களில்லை; அவர்களை அரசர் என்பதிற் பயன் என்? அவர்களால் யார், என்ன நன்மையைப் பெறுகின்றனர்? அண்ணலே! தோன்றலே உத்தம குணங்கள் நிறைந்த அரசன் நீ புலவர் பெருமையையும் தமிழ் அரும்ையையும் உணர்ந்து நடப்பவன் நீயே. வலிபெற்ற நின் தாள் வாழ்க, யான், நின்னைக் கண்டு களிக்க வந்தேன். வயவர் பெரும வில்லோர் செல்வ: சேயிழை கணவ! பாணர் புரவல! புகழ்சால் மார்ப! நின்னை நாடி வந்தோர்க்கு இல்லை என்று கூறி அவர் மனம் உளைந்து செல்லுமாறு செய்யாது, கேட்டதைக் கொடுத்துக் களிக்கும் செம்மலே! நினது பெருமையை யான் என்னென்று கூறுவேன்! நினது நாட்டில் விளையும் நெல்லைப் பாவலர்க் கும் இரவலர்க்கும் வாரிவாரிக் கொடுக்கின்றனை; தன் நாட்டில் விளையும் நெல்லை உணவாகக் கொடுத்தலில் தவறான் சேரமான்’ என்று யாவரும் நின்னைப் போற்றத்தக்க நிலையை அடைந் துள்ளனை. முத்துக்களையும் பெரிய மூதூர்களை,