பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் 53 அமர்ந்து, "மலை நாட்டையுடைய பாரி பெரிய கைவண்மையையுடையாய்! நீயும் யானும் கலந்த நட்பிற்குப் பொருந்த யானும் நின்னுடன் கூட வருவதற்கு மனம் இல்லாமையாலே, நீ ஈண்டுத் தவிாக என்று சொல்லி இவ்வாறு மாறுபட்டனை யாதலால் நினக்கு யான் பொருந்தினவன் அல்லேன். - - அதனால், நீ எனக்கு உதவி செய்த காலங் களிலும் என்னை வெறுத்திருந்தாய் போலும். இவ்வாறு யான் பொருந்தினவன் அல்லேனா யினும் இப்பிறப்பின் கண் நீயும் நானும் கூடி இன் புற்றிருந்ததுபோல, மறு பிறப்பினும் நின்னோடு கூடி வாழ்தலை ஊழ் கூட்டுக" என்று மனமுருகப் பாடி, வடக்கிருந்து யோக நெறியால் மூலக்கணலை எழுப்பி உயிர் நீத்தனர். இவர் பாக்கள் சங்க நூல்களில் பல உள. அவை உவமைகள் நிறைந்தவை; பழமொழிகள் பல்கியவை; வருணனைப் பகுதிகள் வாய்ந்தவை; பல உயரிய நீதிகளைப் புகட்டுபவை; அக்காலத் தமிழ் மக்கள் பழக்கங்கள், நாட்டு நிலைமை, அரசர் நிலைமை, இன்ன பிறவும் இனிதின் இயம்பு பவை. ஆதலின் நீவிர் இப்பாடல்க்ளைப் பன் முறையும் படித்து உணர்தல் பெரு நன்மை பயக்கும். -