பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணர் பிறப்பும் இளமையும் பரணர் என்னும் புலவர் பெருமான் கடைச் சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மரில் ஒருவர். இவர் கபிலரை ஒப்புக் கவி பாடுவதில் வல்லவர். இலக்கண நூல்களில் உம்மைத் தொகைக்கு உதா ரணங் காட்ட வந்த ஆசிரியர்கள் கபில பரணா' என்று கூறிப் போந்தது, இவ்விரு புலவர்களும் ஒரே காலத்தில் கல்வி முதலியவற்றில் ஒரு தன்மை யாக மேம்பாடுற்று விளங்கினமையைக் காட்டும். இவர் இன்ன குலத்தவர் என்பது தெரியவில்லை. இவர் இளமையில் நல்ல சிரியரிடத்துக் கல்வி பயின்று, நினைத்த மாத்திரத்தானே கவி பாடும் ஆற்றல் கைவரப் பெற்றவர். இவரது புலமைத். திறத்தையும் பரந்த ஆராய்ச்சியையும் இவர் அரும் பெரும் பாடல்களால் நன்கறியலாம். பரணரும் இளஞ்சேட்-சென்னியும் இளஞ்சேட் சென்னி என்பவன் சோழ நாட்டை ஆண்டுவந்த சோழ மன்னவன். இவன். கரிகாற் பெருவளத்தானின் தந்தை அழுந்துளர் வேளிடம் மகட்கொண்டோன். இவ்வரசன் வீரத் திற் சிறந்தவன்; கொடையிலும் அங்ங்னமே.