பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணர் 55 இவனது புகழைக் கேட்ட பரணர் இவனைச் சென்று காண விருப்பங் கொண்டார்; விரும்பிய வண்ணம், மதுரையினின்றும் நீங்கிச் சோழ நாட்டை அடைந்தார்; சோழனைக் கண்டார். சோழர் பெருமான் தமிழருமையையும் புலவர் பெருமையையும் நன்குணர்ந்தவன் ஆதலின் பரனரை முகமன் கூறி வரவேற்றான்; அவருக்கு நல்விருந்தளித்தான். புலவர் சோழனது நற்குண நற்செயலைக் கண்டு களிப்படைந்து, அவனது பெருமையை கூறுபவராய், வாள் வெற்றியைத் தருதலாற் குருதிக்கறை பட்டது; செக்கர் வானத்தினது அழகை ஒத்தது. கால் புடை பெயர்ந்து போர் செய்து களத்தைத் தமதாக்கிக் கொள்ளுதலால் வீரக்கழல் ஒலித் தலைச் செய்கின்றன; கொல்லும் ஆனேற்றினது கோட்டை ஒத்தன. பரிசைகள் ஒலித்துத் தைத்த அம்புகளால் துளை பெற்றுள்ளன: குதிரைகள். பகைவரைக் காட்டப் பலவாறு போர்க்களத்தில் வேகமாய்ப் பறந்தன; அதனால் அவற்றின் கடிவாளம் இறுகி வாய் செந்நிறம் அடைந்தது. அதனால் அவை, மான் முதலானவற்றின் கழுத்தைக் கவ்வி உதிரம் ஊற்றி உண்ட புலியை ஒலித்தன. களிறுகள், கதவை முறித்து வெகுண்டு உலாவி நுனி தேய்ந்த வெளிய, கோட்டை உடைமையால் உயிரை உண்னும் கூற்றை ஒத்தன. நீதான், அசைந்த தலையாட்டம் அணிந்த கதியையுடைய குதிரையாற் பூட்டப்