பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணர் 57 . பட்டன. வெற்றிப் புகழ் மாட்சிமைப்பட்ட குதிரைகள் எல்லாம் ஆண்மைக்கேற்ற வீரப் பாட்டுக் கூற்றையுடைய மேலாட்களுடனே அக் களத்தே பட்டன. தேர் ஏறி வந்த பெருவீரர். அனைவரும் இப்போரில் தம் ஆவி நீத்தனர். வாரால் விசிக்கப்பட்டுத் தொழில் மாட்சிமைப் பட்ட மயிர் சீவாது போர்க்கப்பட்ட கண்ணை யுடைய முரசங்கள் யாவும் தட்டுவார் இறந்தமை யால் இருந்து கெட்டன; சாந்து அமைந்த மார்பின் கண்ணே நெடிய வேல் பாய்ந்தனவாக அரசரும், பொருது அக்களத்தின் கண்ணே மடிந்தனர். கழனிக்கண் ஆம்பல் தண்டாற் செய்த வளை யணிந்த கையினையுடைய மகளிர், வேலை செய் யும் குளிர்ந்த புனங்களைக் கொண்ட புதுவருவாய் அறாத ஊர்களையுடைய அழகிய அகன்ற இடத்தையுடைய நாடு, இனி, என்ன வருத்த முறுமோ!" - பரணரும் பேகனும் பரணர், வையாவிக் கோப்பெரும் பேகனைக் காணச்சென்றார். நாம், இப்பேகன் என்பவனைப் பற்றிக் கபிலர் வரலாற்றில் முன்னரே கூறியுள் ளோம். அவன் புலவரைப் பெரிதும் வரவேற்று உபசரித்தான். அவனது பெரும் புகழைக் கேள்வி யுற்ற புலவர் அவனைப் புகழ விரும்பியவராய், வற்றிய குளத்தின் கண்ணே, பெய்தும் அகன்ற விளைநிலத்தின் கண்ணே சொரிந்தும் இவ்வாறு