பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரனர் 59 தன்மையேம் ஆயினேம். படாத்தினை மயிலுக்குக் கொடுத்த எம் இறைவன், மதமிக்க யானையையும் மனம் செருக்கிய குதிரையையும் உடைய பேகன். அவனது கைவண்மை மறு பிறப்பை நோக்கி எவ்வளவாயினும் கொடுத்தல் அழகியது என்று கருதியதோ? எனின், அன்று; ஆயின், அது பிறரது மிடியைக் கருதிற்று' என்று பாணாற்றுப் படை யாகப் பகர்ந்தார். - இங்ங்னம் சென்ற புலவர் சிலகாலங் கழித்து மீட்டும் பேகனை நாடி வந்தார்; அவனது அரண் மனையை நோக்கிச் சென்றார்; பேகனைக் கண்டாரில்லை; கண்ணிரும் கம்பலையுமாக நின்று கொண்டு இருந்த அவ ன து மனைவியைக் கண்டார்; மனம் வருந்தினார்; ப்ேகன் அரண் மனையில் இல்லாததற்ரும் அவள் வருந்துவதற்கும் உற்ற காரணத்தை உணர்ந்தார்; உடனே பேகன் இருந்த இடத்தை உணர்ந்து அங்குச் சென்றார். அவர் அவனை நோக்கி, - "இளையோய்! நீ, அருள் அற்றிருத்தல் கொடிது; மாலைக் காலம் வந்த அளவிலே சிறிய யாழை இரங்கற் பண்ணாகிய செவ்வழி' என்னும் பண்ணிலே நினது வளமிக்க நாட்டையும் நினது கொடைத் திறத்தையும் நினைந்து பாடினேமாக: நறுநெய்தல் போன்று பொவிந்தமையுண்ட கண்களினின்றுங் கலங்கி வீழ்ந்த இடைவிட்ட துளிகள் அ னி ந் த மார்பை நனைப்ப,