பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நாற்பெரும் புலவர்கள். பட்டார். அவர், சேரன் செய்த போர்ச் செயல் களையும் பத்தினிக்கு ஆலயம் எடுப்பித்ததையும அவன் குணாதிசயங்களையும் வைத்துப் பாட வேண்டும் என்று விரும்பினார்; தான் விரும்பிய வண்ணம் சேர நாட்டை அடைந்தார்; அடைந்து செங்குட்டுவனைக் கண்டார். - புலவர் ஐந்தாம் பத்தைப் பாடியது தனது தந்தைக்கும் தனக்கும் உயிர்த் தோழ ராயும் பைந்தமிழ்ப் புலவராயும் விளங்கிய பரணரைக் கண்ட செங்குட்டுவன் முக மலர்ச்சி யோடு எதிர் சென்று வரவேற்று, அவருக்கு விருந் தளித்தான். புலவர் பெருமகிழ்ச்சி உற்றார்; அவன் அரும் பெருஞ் செயல்களையும் குண விசே டங்களையும் கூறிப் புகழ்ந்தார். அரசன் மன மகிழ்ந்தான். பின்னர்ப் பரணர் அவனைப் பற்றிப் பத்துப் பாடல்களைப் பாடினார். அப் பத்துப் பாடல்களும் பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் உள்ளன. அவற்றில் செங்குட்டுவன் வீரச் செயல்கள், குணாதிசயங்கள் முதலியன கூறப்பட் டுள்ளன. அவற்றில் பெரும்பாலான செங்குட்டு வன் என்ற தலையங்கத்தின் கீழ் முன்னமே வந் . துள்ளன. எஞ்சியவற்றில் சிறப்பாக உள்ளன வற்றை ஈண்டுக் குறிப்போம்: - செங்குட்டுவன் பழையன் என்பானோடு திகழ்த்திய பெரும் போரில், அவனது காவல் மர மாகிய வேம்பினைத் துண்டம் துண்டமாகத் தறிப்