பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணர் 67 பித்து, அப்பழையன் யானைகளையே கடாக் களாகப் பூட்டி, அவன் மகளிரது கூந்தலை அறுத்துத் திரித்து அதனையே கயிறாகவுங் கொண்டு வண்டியில் இழுப்பித்தனன் என்பது தெரிகிறது. - ? போரில் வெற்றிபெற்ற வீரர்கட்குச் செங் குட்டுவன், தான் கைக்கொண்ட பகையரசனின், பொருள்களை வழங்குவது , வழக்கம் என்று பரணர் கூறியுள்ளார்; இங்ங்னமே, அவன் அப் பொருள்களைப் போர்க்களம் பாடும் புலவர்க்கும் மற்ற இரவலர்க்கும் வேண்டியவற்றை வேண்டிய வாறே அளித்தனன் என்று பாடியுள்ளார். செங்குட்டுவன் முன்னோர் எழுமுடி’ என்று பெயர் பெற்ற மாலை ஒன்று உடையராயிருந் தனர். சேரர், அரசர் எழுவரை வென்று, அவ் வெற்றிக்கு அறிகுறியாக அவரது ஏழு முடியாலும் செய்யப்பட்ட மாலையை அணிந்து வந்தனர். ஆதலின் அம்மால்ை அப்பெயர் பெற்றது. அதனைச் செங்குட்டுவனும் அணிந்திருந்தான் என்று பரணர் பகர்ந்துள்ளார். ... செங்குட்டுவனின் இயற்கைக் குணங்கள் பல வற்றுள்ளும் அவனது வீரத்தன்மையே தலை சிறந்து விளங்கி இருந்ததென்பது, இளங்கோவடி களும் பரணரும் அக்குணத்தையே பாராட்டிப் புகழ்தலால் அறியக் கிடக்கின்றது. பர்ண்ர் செங் குட்டுவனுக்குப் பிற வேட்கைகளை விடப் போர் வேட்கையே மிக்கிருந்ததென்று புகழ்ந்துள்ளார்.