பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணர் - 7 1 கானகத்துச் சிறப்புங் கூறியுள்ளார்: அதிகன் என்னும் சிற்றரசனின் வேங்கை மலையைப் புகழ்ந்து பாடியுள்ளார். இவர், சோழன்-கரிகாற். பெருவளத்தான் மகள் ஆதிமந்தி’ என்பாள் தன் காதலனை இழந்து புலம்பிய கதையை விரித்தும் சுருக்கியும் உவ்மமாக்கியும் பல இடங்களில் கூறியுள்ளார்; அதிகமான் நெடுமானஞ்சி திருக், கோவலூரை வென்றதனைப் பாராட்டிக் கூறி யுள்ளார். இவர், இங்ங்னமே பலரையும் புகழ்ந்து, அரிய சொற்பொருள் நயங்களை வைத்து அழகுறப் பாடிப் போந்தார் இத்துணை அரசர்கள், சிற்றரசர்கள் முதலி, யோர் பெயர்கள் இவருடைய பாடல்களில் இடம் பெற்றுள்ளமையால் இவர், அவர்களை நேரிற் கண்டும், கேள்வியுற்றும் அறிந்தவர் என்பது தெரி கிறது. பல தலங்களைப் பற்றிக் கூறுவதில் இருந்து. இயற்கைப் பேரழகில் ஈடுபட்ட பெரியார் இவர் என்பது அறியக் கிடக்கிறது. நீங்கள் புறநானூறு முதலிய சங்க நூல்களை வாசித்துப் பரணர் போன்ற பண்டைப் புலவர் பெருமக்களின் வரலாறுகளையும், நம் தமிழ்நாட்டு அக்காலத்திய நிலைமை, நாகரிகம் இன்ன பிறவற்றையும் அறிதல் வேண்டும். தமிழராகிய நாம் நமது வரலாற்றை: அன்றோ முன்னர் அறிதல் வேண்டும்!