பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் 73 இருந்தார். அவர் ஆசிரியர் என்ற முறையில் பலருக்குக் கல்வி போதித்தமையின் கணக்காயர் என வழங்கப் பெற்றார். அவர் செய்த நற்றவமே உருவெடுத்தாற் போன்றும். தமிழ்த்தாயின் செல்வக் குழந்தை என எக்காலத்தவரும் புகழத் தக்கவாறும், தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை எனப்பெயர் பெற்று ஒல்காப்புலமையோடு வாழப் பிறந்தவர் என யாவரும் புகழ்ந்து கூறத்தக்க வாறும், குமாரர் ஒருவர் அவருக்குப் பிறந்தார். .கீரன் என்பது அவரது இயற்பெயர். அவர் பெரும் புலவராய்த் திகழ்ந்த காலத்து அறிஞர் பலர், சிறப்புப் பொருளை உணர்த்தும் இடைச்சொல் லாகிய 'த' என்பதனையும் ஆர் விகுதியையும் அவரது பெயரோடு சேர்த்து நக்கீரனார்' என அழைப்பாராயினர். . அவர், தக்க வயதடைந்து தமிழ்ப் புலமை குறைவறப் பெற்றவுட்ன் மதுரையில் நடந்துவந்த கடைச் சங்கத்துப் புலவருள் ஒருவராகச் சேர்ந் தார். பின்னர், நாள் செல்ல, செல்ல அவரது பேராற்றலைக் கண்டு வியந்த புலவர்கள் அவரைத் தங்கள் நலைமைப் புலவராக ஏற்றுப் போற்றி னார்கள், நக்கீரருடன் நாற்தொன்பது புலவர்கள் கடைச் சங்கத்தில் இருந்து தமிழராய்ந்தனர் நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தாமே மந்தியம் என்ப.: - தொல்காப்பியம்