பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ž6. நாற்பெரும் புலவர்கள் பகுதியை நன்மாறன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் ‘இலவந்திகைப் பள்ளி'யில் துஞ்சியமையின் பிற்காலத்தே இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்’ என வழங்கப் பெற்றான். அம் மன்னன் அக்காலத்திருந்த முடியுடை மூவேந்தரினும் சிறப்புற்று விளங்கினான்; தமி ழுக்குத் தாய் போன்றவன்; அரசற்குரிய உத்தம இலக்கணங்களைப் பெற்றவன், செங்கோலன்; தண்ணளியன். அவனது அரண்மனை இரவலர்க் குத் தாய் வீடு போன்று இருந்தது. . . . . பாண்டியன் வருவார்க்கும் போவோர்க்கும் வரையின்றிக் கொடுத்துவந்தமை, தமிழ் நாடெங் கும் பரவியது. பல பெரும் புலவர்கள் அவனைப் பாடிப் பரிசில் பெற்று ஏகினர். அவனிடம் சென்ற புலவர்கள் அவன் நற்குணங்களை வியந்து பாடினர். இவ்வாறு சென்று பாண்டியன் நட்பைப் பெற்ற புலவர்கள் மதுரை-மருதன் இளநாகனார், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், வடம வண்ணக்கன் பெரிய சாத்தனார்' என்போர் ஆவார். - நன்மாறனைச் சென்று காண நக்கீரர் விருப்பங் கொண்டார்; விரும்பிய விதமே கண் டார். அவர் அருமை பெருமைகளை நன்குணர்ந்த பாண்டியன், அவரை வரவேற்று நல் விருந்து அளித்தான். புலவர் பெரிதும் மனமகிழந்தார்.