பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் 77 அவர் தமது மகிழ்ச்சி தோன்ற அரசனைப் புக பவராய், ... " - - 'சிவபிரான், ஆனேற்றை வெற்றியாக உயர்த். தியவன்; அழல்போலும் விளங்கிய சடையினை உடையவன். நீல மணி போலும் திருமிடற்றை உடையவன். பலராமன், கடற் கண்ணே வளரும் சங்கை ஒக்கும் திருநிறத்தை உடையவன். கொலையை விரும்பும் கலப்பையை ஆயுதமாகக் கொண்டவன்; பனைக் கொடியை உடையவன், திருமால், கழுவப்பட்ட அழகிய நீலமணி போலும் திருமேனி உடையான்; வானுற ஓங்கிய கருடக் கெர்டியை உடையவன்; வென்றியை விரும்பு, வோன் செவ்வேள், நீலமணி போலும் நிறத்தை யுடைய் மயிற் கொடியை எடுத்தவன். மாறாத வெற்றியை உடைய அம்மயிலாகிய ஊர்தியை உடையவன். இதுவரை கூறப்பட்ட நால்வரும் உலகத்தைப் பாதுகாப்பவர்; முடிவுக்காலத்தைச் செய்யும் வலியினையும் தோல்வியில்லாத நல்ல புகழினையும் உடையவர். இவர்களுள், நீ விலக்கு தற்கரிய வெகுட்சியாற் சிவபிரானை ஒப்பை;. வலியாற் பலராமனை ஒப்பை, புகழாற் பகைவ ரைக் கொல்லும் மாயோனை ஒப்பை; கருதியது முடித்தலான் முருகனை ஒப்பை இவ்வாறு அவ் வவரை ஒத்தலான், நினக்கு எவ்விடத்தும் அரியனவும் உளவோ? - • ஆதலால், இரப்போர்க்குப் பெறுதற்கரிய அணி கலங்களைப் பெரிதும் வழங்கி, யவனர் நல்ல: