பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நாற்பெரும் புலவ ர்கள் குப்புயிற் கொண்டு வரப்பட்ட குளிர்ந்த நறுநாற் றத்தை உடைய தேறலைப் பொன்னாற் செய்யப் பட்ட புனைந்த கலத்தின் கண்ணே ஏந்தி, நாடோறும் ஒள்ளிய வளையையுடைய மகளிர் ஊட்ட, மகிழ்ச்சி மிக்கு இனிதாக நடப்பாயாக வென்றியால் உயர்ந்த வளையுடைய மாற அழகிய இடத்தையுடைய வானத்தின் கண்ணே நிறைந்த இருளைப் போக்கும் வெய்ய கதிரையுடைய ஞாயிற்றை ஒப்பவும் மேலைத் திக்கில் தோன்றும் குளிர்ந்த கதிரையுடைய பிறையைப் போலவும் இவ்வுலகத்தோடு கூட நின்று நிலை பெறுவாயாக." என்று பொருள் படத்தக்க அரும்பா ஒன் றினைத் திறம்படப் பாடி வியந்தார்; பின்னர் அவர், தெளிந்த நீராற் சூழப்பட்ட உலக முழு வதையும் பிற வேந்தர்க்குப் பொதுவாதலின்றித் தமக்கே உரித்தாக ஆண்டு வெண்கொற்றக் குடை யால் நிழற் செய்த ஒரு தன்மையை உடை யோர்க்கும், இடையாம்த்தும் நண்பகலும் துயிலா னாய் விரைந்த செலவையுடைய விலங்குகளைப் படுக்கக் கரு திச் செல்லும் கல்வியில்லாத ஒருவனுக்கும் உண்ணப்படும் பொருள் நாழி, உடுக்கப்படுபவை இரண்டே, பிற எல்லாம் ஒக்கு மாதலால் செல்வத்தாற் பெறும் பயனாவது கொடுத்தல்; செல்வத்தை யாமே நுகர்வேம்’ என்று கருதின், தவறுவன பல'-என்ற பொருளை அமைத்துச் சிறந்த பாடலைப் பாடினர்.