பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நாற்பெரும் புலவர்கள் மறைந்தன; ஆண்டுகள் சென்றன. பின்பு நாடு மலிய மழை பெய்தது; வளஞ்சிறந்தது; வற்கடமும் தொலைந்தது. அப்போது அரசன் நூல் வல்லா ரைக் கொணர்க" என இஏவலரை எப்பக்கமும் ஏவினன். அவர்கள் எண்டிசைகளிலும் சுற்றித் திரிந்து, “அரசே! எழுத்ததிகாரமும் சொல்லதிகார மும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தேடிக் கொணர்ந்தோம். ஆ யி ன், பொருளதிகாரம் வல்லாரைக் காண்கிலேம்' என்று கூறினர். ஏவலர் கூற்றைக் கேட்ட காவலன் பெரிதும் மனங் கவன்று "என்னை எழுத்தும், சொல்லும், யாப்பும் ஆராய் வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறவில்லை யாயின் இவை:பெற்றும் பயனில்லையே! என் செய். வோம்!” என்று கூறி ஏங்கி நின்றான். அரசன் கவல்வதை உணர்ந்த அவிர்சடை அண்ணல், "என்ன! அரசன் பொருளதிகாரம் பெற வில்லை எனக் கவல்கின்றான்! பாவம் அவனது மனக்குறையை யாம் தீர்ப்போம்" என்று தமக்குள் கூறிக்கொண்டு, அறுபது சூத்திரங்களைச் செய்து மூன்று செப்பேடுகளில் எழுதிப் பீடத்தின் கீழிட்டான். - வழக்கம் போலக் கோயிலைச் சுத்தம்செய்பவன் அவண் போந்து கோயிலைத் துடைத்துச் சுத்தி செய்தான். பின்னர், என்றும் பீடத்தின் கீழ் அலகிட்டறியாதவன், தெய்வத் திருவருளால் அன்று பீடத்தின் கீழ் அலகிட்டான் இடவே, அதன்