பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நாற்பெரும் புலவர்கள் ஒவ்வொரு புலவர் ஒவ்வொரு விதம் சூத்திரங் கட்குப் பொருள் உரைத்தனர். அவர்கள் தாம் கூறிய உரையே சிறந்ததென்று கூத்தாடினர். எனவே உண்மையான பொருள் இதுதானென ஒருவராலும் உறுதியாகக் கூற முடியவில்லை. இங்ங்னம் பல நாட்கள் கழிய, புலவர்கள் ஒன்று கூடி "நாம் எத்துணை ஆராயினும் உண்மைப் பொருள் விளங்கியவாறில்லை. நாம் நமதரசனிடம் சென்று. நமக்கோர் காரணிகளைத் தரல் வேண்டு மென்று கேட்டு, அவனைப் பெற்று, அவன்ால் இதற்கு உண்மை உரையைக் காண்போம்' என்று தீர்மானித்தவராய், அரசனை அடைந்தனர். அரசன் புலவரைக் கண்ணுற்றதும், "என்ன: பொருளதிகாரத்திறகு உரை கண்டீர்களோ?” என வின்வினன். புலவர்கள், “அரசே! எங்கள் உரையில் உண்மை இதுவெனப் புலப்படாது தயங்குகின் றோம். எங்கட்குக் காரணிகன் ஒருவனைத் தருக!" என்றனர். மன்னன் மனங்கவன்று, "புலiர்! என்னே! யான் எங்குச் சென்று காரணிகனைக் கொணர்வேன்!" என்று கூறி ஏங்கினன். அரசன் பின்னர்ப் புலவரை நோக்கி, நீயிர் நாற்பத் தொன்பதின்மர் பெரும் புலமை நிறைந்தவர்களா யிற்றே. உமக்குக் காரணிகனும் வேண்டுமோ? யான் என் செய்வேன்!" என்றனன்; என்றாலும், புலவர்கள், "சூத்திரங்களைச் செய்தவன் ஆல வாய்ப் பெம்மானன்றோ! அவனையே காரணி கனைத் தரும்படி வேண்டுதும்" என்று கோயிலிற் சென்று வரங்கிடந்தனர். 'l ' w T . .س