பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் . . 83 இடையாமத்திலே கொக்கேசர் அசரீரியாக "இவ்வூர் உப்பூரிகுடி கிழார் மகன் உருத்திர சன்மன் என்ற ஒருவன் உளன், அவன் பைங்கண்ணன்; புன் மயிரன்: ஐயாட்டைப் பிராயத்தான் அப்பிள்ளை :மூங்கையன். அவன் குமாரக் கடவுள்; ஒரு சாபத் தால் அவன் இங்குத் தோன்றினன். அவனைக் கொணர்ந்து சங்க ஆசனமேலிருத்திக் கீழிருந்து, சூத்திரப் பொருளை உரைத்தல் வேண்டும். உண்மையான பொருளாயிருப்பின், கண்ணிர் விடுவன், மெய்ம்மயிர் சிலிர்க்கும்; உண்மையற்ற உரையைக் கேட்கும்போது வாளா இருப்பான். இங்ங்னம் செய்யின் உண்மையான பொருளுரை கிடைக்கும்" என்று மும்முறை கூறி அருளினார். புலவர்கள் உப்பூரிகுடி கிழார் மனையை அடைந்து, ஈசன் திருவுள்ளத்தை அவரிடம் கூறி .உருத்திரசன்மனை வேண்டி அழைத்து வந்து, ஆசனத்திருத்தி, மங்கலமாகிய நல்லாடை, நற் சாந்து, நற்பூ அணிவித்தனர். பின்னர் ஒவ்வொரு புலவராக ஆசனத்தின் கீழ் அமர்ந்து பொருள் உரைத்தார், உருத்திர சன்மன் வாளாவிருந்தனன். பின்னர், 'மதுரை மருதனிள நாகனார் உரை கூறினர். அவ்வுரையைக் கேட்ட உருத்திர சன்மன் ஒரோவிடத்துக் கண்ணிர் விட்டு மெய்ம்மயிர் சிலிர்த்து இனிது வீற்றிருந்தனன். பின்னர், கணக்காயனார் மகனார் நக்கீரனார் . பொருள் தெற்றெனப் புலனாகும்படி உரைப்ப, உருத்திர சன்மன், பதந்தோறும் கண்ணிர் விட்டு’