பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நாற்பெரும் புலவர்கள். மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான். உரையும் கூறி முடிந்தது. புலவர்கள் யாவரும் மெய்யுரை உரைத்தவர் நக்கீரனாரே' எனப் போற்றினர். மன்னர் மனக்கவலை ஒழிந்தது; உண்மைப் பொருள் உரைத்த நக்கீரரை அரசன் பெருமை செய்தான்; நடுநிலை வகித்து உண்மையை விளங்கச் செய்த உருத்திர சன்மனைப் போற்றி, அவனை அவனது இல்லத்திற் சேர்த்தனன். - இங்ங்னமாக, நல்லிசைப் புலவராய நக்கீரர். இறையனார் இயற்றிய களவியலுக்கு மெய்யுரை. கண்டு பொய்யாப் புகழ் பெற்றார். - நக்காகும் சொக்கேசரும் மதுரை மாநகரில் அரசு செலுத்தி வந்த, பாண்டிய மன்னவன் நற்குண நல்லொழுக்கம். வாய்ந்தவன். அவன் சிறந்த சிவபக்தன். ஆல. வாய்ப் பெம்மானடிகட்குத் திருநந்தனம் ஒன்றை. உண்டாக்கி, ஒவ்வொரு நாளும் சண்பக மலர் களால் மாலை கட்டி, அப்பெருமானுக்குச் சாத்திப் போற்றி வந்தனன். அதனால் அவன் சண்பக மாறன் எனவும் வழங்கப்பட்டான். அவன் அடிக்கடி தன் மாதேவியுடன் இளமரக் 'காவுக்குச் சாயங்கால வேளையிற் செல்வது வழக் கம். அவ்விள மரக்காவில் அழகிய் செய்குன்று ஒன்று உண்டு. அதன் மீது அரசனும் அரசியும் வீறறிருத்தல் வழக்கம். ஒருநாள் மன்னன் மாதேவி.