பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் 89 அன்பற்கு மெய்யனே! நாயேன் அறியாதுரைத்த அபசார வார்த்தையைப் பொருட்படுத்தாது அடியேனை ஆட்கொள்ளல் வேண்டும்" என்று வேண்டினர். கருணையங் கடலான இறைவன் சீற்றந் தணிந்து, "கைலை காண்; இந்நோய் நின்னைவிட்டு அகலும்" என்று கூறி மறைந்தனன். நக்கீரர் உடனே குட்ட நோயால் வாட லானார். அவர் கொண்ட வருத்தம் கூறம்பால 'தன்று. அப்புலவர் பெருமான் மனங் கவன்று, 'யான் கைலை கண்டு இந்நோயை ஒழிப்பேன்" என்று துணிவுகொண்டு, புலவர்களை நோக்கி, "உங்களோடு இருந்து இனிதே காலங் கழிக்கப் பேறு பெறாத பாவியேனை மறந்துவிடுமின்” என்று கூறினார். அவர்கள் அவரை மார்புறத் தழுவி, கண்களில் அருவிபோன்று நீர் சொரிய அவருக்கு விடையீந்தனர். - நக்கீரச் சிவப் பிழம்பாதல் பின்னர், நக்கீரர் மதுரையை விட்டுப் பிரிய மனமற்றவராகி வருந்தி. 'இனி மீண்டும் மதுரையை எப்பொழுது காண்போம்! சங்கப் புல்வர்களை எப்பொழுது காணப் போகிறோம்! சொக்கேசன் திருவடித் தாமரைகளைக் காண்ப தெப்போது? பல புகழ் நிறுவிய பாண்டிய மன்ன னைக் காண்பதெக்காலம்: நம்மை அவர்கள் மறந்து விடுவார்களோ? நமது பெயர் இனி மதுரை யில் நிலைபெற்றிருக்க முடியமோ? அந்தோ! என் செய்வோம்! எனப் பலவாறு எண்ணமிட்ட