பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் 9,i . நோய் நீங்கும் என நினது தந்தை செப்பினன்' என்றார். குமரன், "இக் குளத்தில் மூழ்குவையேல், கைலை காணலாம்;' எனக் கூறி மறைந்தனன். சேவலங் கொடியோன் செப்பியவாறு திப்பியப் புலமை வாய்ந்த நக்கீரர் அங்கிருந்த திருக்குளத்தில் மூழ்கினார்; தெய்வத் திருவருளாற் பொன் முகரி யாற்றினின்றும் வெளிப்பட்டார்; நாம் இருப்பது காளத்திப் பதி என்பதை உணர்ந்தார்; பின்னர்ப் புலவர் உடல் புளகிப்ப, காளத்தி மலையேறிக் குடுமித் தேவரைத் தரி சித்துப் பேரானந்த முற்றார். - கைலை தாணச் சென்ற தமக்குக் காளத்திச் சேவை கிடைத்தமையின் அவ்விருதருளிக்ளும் ஒன்றேயாமென எண்ணி, நூறு செய்யுட்களால் கைலையையும் காளத்தியையும் துதித்தார். அந் நூறு செய்யுட்களும் அந்தாதித் தொடையால் இயற்றப்பட்டன. அந்நூல் கைலை பாதி க்ாளத்தி பாதித் திரு அந்தாதி என வழங்குகிறது. " .. இங்ங்ணம் பெருமானைப் பலவாறு போற்றிப் பாராட்டிய பெரியார்-நக்கீரர், காளத்தி வேட னான கண்ணப்பனைக் கரத்தால் அணைத்த காளை யான் கழலடி நீழலிற் கலந்தருளினார். நக்கீரர் இயற்றிய கால்களும் பரக்களும் நக்கீரர் இயற்றியனவாகச் சொல்லப்படும் நூல்கள். திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, களவியலுரை, - கைலைபாதி காளத்திபாதித்