பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

21


பகுதியாகச் செயலாற்று; அதுவே நீ பிறந்ததன் பயனாகும். நல்லதோர் வீணை! அதனை நலம் கெடப் புழுதியில் எறிந்துவிடாதே.

எடை இயந்திரம்! வீட்டு நடைபாதையிலேயே வைத்திருக்கிறான்; கூடிற்றா குறைந்ததா? இதுவே அவன் கவலை; அடுத்தது நாக்குச் சுவை! அதனைக் கட்டுப்படுத்துவதே இல்லை; ‘தின்பதில்தான் சுகம் இருக்கிறது’ என்று நினைக்கிறான்; அடுத்துத் தின்பது யாது? எந்தப் புதிய உணவகம் சுவைக்கிறது; எங்கே விருந்து? இதுவே இவன் வாழ்வும் நோக்கமாகவும் அமைகிறது. இவன் இந்த உடம்பினை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறான்; இந்த உடம்பின் நினைவு மட்டும் இருக்கின்றது; தன்னை மறந்து, இவன் எந்த நல்ல காரியமும் செய்வது இல்லை. இவன் கண்ணாடி முன் நின்று தன் அழகைக் கூட்டுதற்கே தன் திறமையைக் காட்டிக் கொண்டு நிற்பான். பெண்களின் இயல்பும் இதுவே, அவர்களிடம் ஒழுங்கு, சீர்மை எதிர்பார்க்கப்படுகின்றன. பெண்களே தம்மைப்பற்றி விமரிசனம் செய்வர்; அதற்காகவாவது அவர்கள் தம்மை அழகு படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது; அதுவும் சற்றுக் கூடிவிட்டால் உள்ள அழகினைக் கெடுத்துவிடுகிறது; முகம் திட்டுத்திட்டாய்ப் பட்டை தீட்டிக் காட்டப்படுகிறது; மற்றவர் மகிழ, அவர்கள் தம்மை அணிசெய்து கொள்கின்றனர். இஃது உலகத்து எந்தப் பெண்ணுக்கும் பொருந்தும். இஃது அவள் இயல்பு வசீகரம் அவளிடம் எதிர்பார்க்கப்படுகிறது. அவள் கிழமாக இருந்தாலும் ஒரு முழம் பூ வைத்தால்தான் அவளுக்குப் பொலிவு சேர்கிறது.