பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

23


ஒன்றுமாய்ப் போட்டுள்ளனர்; அவை உடைந்து கிடக்கின்றன; அவற்றில் எத்தனை பேர் வந்து உட்காரு கன்றனர்? மாடுகள் சுற்றி வருகின்றன; படிக்காத பிள்ளைகளைப் போல அவற்றின் நிழலில் இளைப்பாறுகின்றன. அந்த இடத்தைவிட்டு அகல மறுக்கின்றன; சுண்டல் விற்கும் கிழவி, வியாபாரம் அதிகம் ஆகாவிட்டாலும் அந்த இடத்திலேயே காலம் தள்ளுகிறாள்; மண்டையையும் போடுகிறாள்.

நல்லவர், அல்லவர், சின்னவர், பெரியவர் எல்லாரும் ‘வெய்யிலுக்கு ஏற்றநிழல்’ என்று அங்கு வந்து சுகம் பெறுகின்றனர். ஆலவிதை சிறிதுதான்; அது வளர்ந்தால் பயன் பெரிதுதான். அறச்செய்கை ஆரம்பத்தில் நெல்லிக்கனிதான் வளர்ந்துவிட்டால் அது சாகாவரம் பெற்றுவிடுகிறது; அற நிறுவனங்கள் வளர்க; வளர உதவுக.

மணி அடித்தால் சோறு, மணி அடித்துக் கொண்டுதான் இருக்கிறது; சோறு கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அது சிறை வாழ்க்கை! நாளும் கிழமையும் அன்றாடம் வந்து கொண்டுதான் இருக்கின்றன; சுவரில் ஒட்டிக்கொண்டிருக்கும் சங்கு மார்க்கு நாளேடுகள் கிழிபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன; 365 தாள்கள் இருந்தன; இன்று எலும்பு உருக்கி நோயாளி போல் சிறுத்துக் காணப்படுகிறது; சென்ற நாள்கள் திரும்பி வரப்போவது இல்லை; அழிந்துவிட்டது; செழிக்கப் போவது இல்லை; கழித்தல் கூட்டல் ஆகாது. அறத்தைப் பெருக்கு ஈட்டிய பொருளை வகுத்துக் கொடு; உன் கணக்குச் சரியாகும்; வரவு செலவு கணக்குச் சரிபார்த்து வை; தொல்லையில்லாமல் வாழமுடியும்.