பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

25“என்னடா உனக்கு?”

“பக்தன் நான்” என்கிறான்.

“சித்தம் இழந்தேன்” என்று பித்தம் கொள்கிறான்.

“இங்கே வா! அவள் கையில் ரத்தம்; அதனோடு அழுகல் புண், இதைத்தானே, "மாந்தளிர் மேனி என்று கூறினாய். அவள் கையில் சொரிந்தாள்; அது எரிந்து புண் ஆகிவிட்டது. சும்மா இல்லை; அதைத் தொட்டுத் தொட்டுப் பெரிதாக்கினாள்; கையில் இப்பொழுது கட்டு ஒன்று கட்டி இருக்கிறாள்; ஈ மொய்க்கிறது. பண்டம் அன்று, முண்டம்! அது கண்டம்; ஒரு தண்டம்; இதைப் பார்த்தபின் நீ யோசித்துக் கூறு; இவளா அழகி? அது வெறும் மயக்கம்.”

“அழகு அழகு என்று பித்தம் பிடித்தவன் போல் பேசுகிறாய்; எதை அழகு என்று கூறுகிறாய்? மேல் தோலா? வாழைப் பழத்தை உரித்துக் காட்டுகிறேன். உள்ளே வழ வழப்புதான்; அங்கங்கே ஓட்டைகள்; துளைகள்; இந்த உடம்பு அதன் மீது போர்த்த போர்வை; அதைத்தான் நீ அழகு என்று கூறுகிறாய்! நான் சொல் வதை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? அந்தத் தோலைப் புரட்டிப்பார் நீ தொடவே அருவருப்பாய். அதற்காக ஒரு பெண்ணை இழுத்து வந்து தோல் உரிக்க வேண்டும் என்பது இல்லை; சொன்னால் நீ புரிந்து கொள்வாய்; அவ்வளவுதான். அழகி என்று அழிகிறாயே! எது அழகு? நீ யோசித்துக் கூறு.”

“அவள் வாய் இதழ் சிவந்து இருக்கிறது. அதைக் கண்டு “ஆகா பவளம் அது” என்று பகல் கனவு