பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


காண்கிறாய்; அவள் போட்ட வெற்றிலை பாக்கு; அதில் சேர்த்துக் கொண்ட சுண்ணாம்புச் சரக்கு; தக்கோலம் போட்டு இவள் இந்தப் புதுக்கோலம் பூண்டிருக்கிறாள். வாய் கமழ்க்கிறது. எல்லாம் அந்தப் பாக்கு வெற்றிலை தான்; அதனோடு சேர்த்து வாசனைப் பொடிகள் கமழ்க்கின்றன. நீ ‘மகிழ்க்கலாம்’ என்று கருதுகிறாய். எல்லாம் வெறும் பூச்சு, தீய காற்று அவள் விடும் மூச்சு. ஆபாசம் அதுதான் அவள் சகவாசம்.

நீ அறச்செயல்களுக்கு முதன்மை இடம் தருக; அஃது உன்னை உயர்த்தும். தோல் அழகைக் கண்டு நீ துவண்டு போகாதே; வாலை இளங்குமரிதான் என்றாலும் அவள் தசைப் பிண்டம்; இதை மறந்து விடாதே; கொழு கொழு வென்று இருப்பதும், மிருது வான மென்மையான அவள் மருதுவான புதுமை; கவர்ச்சி, அவள் மேனி சுருங்கும்; கண்கள் ஒடுங்கும்; கைகால்கள் நடுங்கும்; வாழ்க்கை ஒருநாள் உணங்கும்.”

“என்னை வெறியன் என்கிறாய்; உளறுகிறேன் என்று கருதுகிறாய். அவள் கண்கள் நீரில் தோன்றும் குவளை, அங்கே அதன் அயல் பாய்ந்தோடும் கயல் மீன். உன்னைத் தாக்குவதால் ‘வேல்’ என்று எல்லாம் நீ என்னிடம் அளக்கின்றாய்! அதைக் கவிதை என்று கூறி உன்னையே நீ உயர்த்திப் பேசிக் கொள்கிறாய்!”

“கவிஞரே! என்னுடன் வாரும்; இடுகாட்டில் வந்து பாரும்; அங்கு இருக்கமாட்டார் யாரும். இதோ! இது மண்டை ஓடு; மயிர் முளைத்து இருந்த ஒடுதான்; இன்று வெறும் கூடு; சுட்டு எரிபட்ட மண்டை; சதை இல்லை; குழி விழுந்து கிடக்கிறது. கண் நோண்டி எடுத்து