பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


என்பதை அறிவிக்க. “இது முகம்; அவள் எங்கே? “அதோ அறுத்துக் கூறுபடுத்தி வேறு வேறாக வைத்திருக்கிறோம், குடல், கொழுப்பு, நரம்பு, எலும்பு, தசை, நார்கள் நன்றாகப் பார்; இவள்தான் உன் காதலி!”.

“நீ கூறும் காதலி வேறு எத்திறத்தாள்? கூட்டிக் கழித்துப் பார்; அவள் ஒரு சதைக் கட்டு, குருதிக் கொட்டு.”

“மேனி மாசற்ற பட்டு” என்று பிதற்றுவாய். அவள் பேரும் பட்டுதான். எடு கொஞ்சம் துட்டு. இங்கே அவளைக் கொண்டு வந்த அறுவடைக்காரருக்குக் கூறு போட்டுத் தரவேண்டும்; அப்பொழுதான் அவர்கள் அழகாக மூடி அவளைத் திருப்பித் தருவார்; இதை ‘மாமூல்’ என்பாய்; ‘சகஜம்’ என்போம்; அவர்கள் சுடு காட்டில்கூட விடமாட்டார்கள்; கொடுத்தாக வேண்டும்; செத்தவள் உயிர் பிழைத்து வரப்போவது இல்லை. இவளா அழகி? யோசித்துக் கூறு”.

“பட்டுத்துகில் உடுத்திப் பகட்டான தோற்றத்துடன் பட்டம்மாள் காட்சி அளிக்கிறாள்; சந்தனம் பூசிச் சவ்வாது பொட்டிட்டுக் கமக்கிறாள். மல்லிகைப்பூ மணக்கும் கூந்தல் அவ்வல்லிக் கொடிக்கு: எல்லாம் மேற்பூச்சு; இவற்றைக் கண்டா அவள் பேரழகி என்று பிதற்றுகிறாய்? ஊறுகாய் டப்பாவுக்கு பிளாஸ்டிக் மூடி போட்டால் அது பளபளக்கத்தான் செய்யும். அலங்காரம் கண்டு அது காரம் உடையது என்று பேரம் பேசுவது அறிவுடைமையாகாது; அழுகலைத்தான் ஊறுகாய் என்கின்றனர். அது புளிக்கத்தான் செய்யும். அதைத் தின்று நீ களிக்க நினைக்கிறாய். உள்ளே இருக்கும்