பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



நீ விரும்புவது இந்த உடல்; அதனைத் தழுவும் அற்ப ஆசையை நீ விடுக; நான் தெரிவிக்கும் மடல் இது;

காயம் இது பொய்; மாயம் நீ காண்பது, அறம் மெய்; அறிவு மெய்; உண்மை மெய். இம்மூன்றும் சேர்வதுதான் அழகு அறிக, ஆராய்க, மெய்ப்பொருள் காண்க.


6. கூறாமல் சந்நியாசம் கொள்
(துறவு)

இருள் உன்னைச் சூழ்ந்து கிடக்கிறது; அதை நீக்க ஒளிக்கதிர் தேடுகிறாய்; குச்சி கொண்டு கொளுத்துகிறாய்; குத்துவிளக்கு எரியவைக்கிறாய். கும்மிருட்டுக் கம்முகிறது. ஒளி வீசுகிறது. மறுபடியும் விளக்கு அணைகிறது; இருள் சூழ்கிறது; இது என்ன விளையாட்டு? சிறுவர் விளையாடும் கண்ஆம்மூச்சி; விளையாட்டா? ஒளி தவம்; இருள் மருள்.

தவம் செய்கிறான்; அவன் பாவம் நீங்குகிறது; தவம் கெடுகிறது; பாவம் வந்து சுடுகிறது. இதுதான் இந்த மின்மினி விளையாட்டு; கண்மணி பாவம் செய்யாதே; தவத்தை மேற்கொள்.

அவன் அறிவாளி; சிந்தித்துத்துப் பார்க்கிறான்; ஞானம் பெறுகிறான்; “செல்வம் நிலைக்காது; நோய் விலக்கினாலும் அவனையே இலக்காகக் கொள்ளும்