பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

நாலடியார் செய்யுளும் செய்திகளும்




9. பிற மாதரைச் சிந்தையாலும் தொடேன்
(பிறர் மனை நயவாமை)

பக்கத்து வீட்டுக்காரி, புதுச்சேலை உடுத்தி அதிகாலையில் நிற்கிறாள். அவள் அங்கு வருகிறாள் என்பதைத் தெரிகிறான்; பூச்சூடி அன்று மாலை அவன் கண்ணில் படுகிறாள்; ‘புதுச் சரக்கு வந்து இறங்கி இருக்கிறது’ என்பது அறிகிறான்.

இவள் யார்? புதிதாக வந்தவள். அடுத்தவன் மனைவி; சொந்த வீட்டுச் சமையல் சுவைக்காது; அடுத்த வீடு தான் சுவைக்கும். இவன் மதம் கொண்ட யானை, களிப்பு மிக்கவன்; கரும்பு வயலை மிதித்து அதனை விரும்பி உண்ண நினைக்கிறான். எப்படியோ அந்தப் புதியவள் இவன் வலையில் வீழ்ந்துவிட்டாள்.

இனி அடுத்து அவள் கைப்பிடிப்பது தான் விருப்பம். அதனை விட்டுவிட்டால் தருமம்; கவர்ந்தது அவள் சருமம். ஊசி இடம் கொடுத்தால் நூல் நுழைய வழி கிடைக்கிறது. என்றாலும் பார்த்து நுழைய வேண்டும்; வழி சிறிது; இருட்டு வேளை? வெளிச்சம்; அவன் கண்கள் கூகின்றன.

கதவைத் திறந்து வைத்தாள்; கணவன் வெளியேறிச் சென்றான்; அவன் வருவது எப்பொழுது? அது தெரியாது. அதற்குள் முடித்துக் கொள்ளலாம். ஏன் உடல் நடுங்குகிறது. வைத்தியரிடம் காட்டினால். ‘இது