பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


கெட்ட பிழைப்பு: தானம் தராவிட்டாலும் பரவாயில்லை. பிறரைக் கேட்டு வாழ நினையாதே; எந்த இக்கட்டு வந்தாலும் பிறர் படிகட்டு ஏறாதே. மானம் உயிரினும் மதிக்கத்தக்கது. ஒருமுறை கேட்கத் தொடங்கினால் அதன்புறம் நீ மாறமாட்டாய்; தேறமாட்டாய்.

ஊர் நடுவே மரம் பழுத்தது போன்றது என்பர் உபகாரியின் செயல்; குடிநீர் பொதுக் கிணறு. மருந்துச் செடி இவையும் பலருக்கும் பயன்படுகின்றன. இவற்றைப் போன்றவர் உபகாரிகள் என்று உயர்த்திப் பேசினார் வள்ளுவர்; இன்னொரு புது உவமை பலரும் பறித்துச் செல்லும் பனை மரம் ஊர் நடுவே உள்ளது. இஃது உபகாரி உயர்வு; சுடுகாட்டில் காய்க்காத ஆண் பனை அபகாரியின் தாழ்வு. இஃது எப்படி? வள்ளுவர் உவமைக்குத் தோற்கவில்லை நாலடிப் பெருமை.

உபகாரிகள் அவர்கள் வீட்டுக் காவல் இல்லை; துரத்துவதற்கு ஏவல் இல்லை; கத்தி மறைத்து வைத்துச் சுற்றிலும் காவலாளி இல்லை. அடையாத நெடுங் கதவு; அவர்கள் மனம் தூய திறந்தவெளி.

இவர்களுக்கு மாறுபட்டவர்கள் அபகாரிகள்; சுற்றிலும் மதிற்சுவர்கள். ‘நாய் கடிக்கும்’ இது அறிவிப்புப் பலகை. இரும்புக் கதவு உள்ளே எட்டிப் பார்ப்பதைத் தடுக்க முழு கதவடைப்பு; துணிந்து “பிச்சைக்காரர்கள் அனுமதிப்பது இல்லை” என்றும் எழுதியும் வைக்கமாட்டார்கள்; அப்படி எழுதி வைத்தாலும் தொல்லை இல்லை. தம் கஞ்சதனத்தை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள். இப்படியும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை பயனற்றது; இயற்கை நியதிக்கு மாறுபட்டது. மனிதன்