பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 89

தவறு செய்வது மிகவும் வெறுக்கத்தக்க செய்கையாகும். இதனைப் பற்றிக் கூறுவது இந்தப் பகுதி.

பெரியார் என்று பொதுப்படக் கூறியதனால், இது பல முறைகளிலும் உள்ள பெரியார் பலரையும் குறிக்கும். அரசர் அமைச்சர் போன்ற சமூகத் தலைவர்களும், ஆசான் சான்றோர் போன்ற அறிவுத்துறைத் தலைவரும், உயர்குடியினர் துறவியர் போன்றோரும் எல்லாரும் பெரியோர்களே. அவர்கள் தமக்குப் பிழை செய்பவர்களையும் பொறுக்கும் இயல்பு உடையவரே என்றாலுங் கூட அவர்கள் சினங்கொள்வதால் நேரிடுகின்ற பெருங்கேட்டிற்கு ஒவ்வொருவரும் அஞ்சுதலும் வேண்டும்.

பெரியாரைப் பிழையாமை உயர்ந்த பண்புகளை மதித்துப் போற்றும் உள்ளச் செப்பத்தையும் தருவதாதலால் அனைவரும் இதனைக் கவனமாகக் கொள்ளல் வேண்டும்.

161. பொறுப்பர் என்றெண்ணிப், புரைதீர்ந்தார் மாட்டும் வெறுப்பன செய்யாமை வேண்டும்; வெறுத்தபின், ஆர்க்கும் அருவி அணிமலை நன்னாட! பேர்க்குதல் யார்க்கும் அரிது. அருவிகள் பேரொலியோடு வீழ்ந்து கொண்டிருக்கின்ற அழகிய மலைகளையுடைய சிறந்த நாட்டின் தலைவனே! பெரியோர்கள் குற்றம் என்பதே அறவே இல்லாதவர்கள். அதனால், அவர்கள் எது செய்தாலும் பொறுத்துக் கொள்வார்கள்’ என்று நினைத்துங்கூடப் பெரியோர் வெறுப்படைகிற செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் வெறுப்படைந்து விட்ட பின்னர், அந்த வெறுப்பினால் தமக்கு வரும் கேட்டினைப் போக்குதல் எவர்க்குமே அரிதாகும்.

‘அவர்கள் பொறுத்தாலும் அவர்களை மனங்கலங்கச் செய்த தீவினையின் விளைவினின்று யாரும் தப்ப முடியாது’ என்பது கருத்து. புரை உள்ளே புண்பட்டிருக்கும் நிலைமை.

162. பொன்னே கொடுத்தும், புணர்தற்கு அரியாரைக்

கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும்-அன்னோ? பயனில் பொழுதாக் கழிப்பரே நல்ல நயமில் அறிவி னவர்.

சிறந்த மேன்மைப் பண்பில்லாத அறிவினையுடையவர்கள், அதாவது அற்பமான அறிவுடையவர்கள், பொன்னையே,