பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நாலடியார்-தெளிவுரை

காணிக்கையாகக் கொடுத்தும் தொடர்பு கொள்வதற்கு அரியவர்களான பெரியவர்களை, ஒன்றும் தராமலே சேர்ந்து பழகத்தக்க வாய்ப்பைப் பெற்றிருந்துங்கூட, ஐயோ! அதனைப் பயனுள்ள பொழுதாகச் செய்து கொள்ளாமல், வீண் பொழுதாகக் கழிக்கின்றார்களே! •

‘பெரியோர்களை அவமதிப்பது மட்டுமன்று; அவர்களுடைய தொடர்பு வலியக் கிடைத்த காலத்தும் அவர்களுடைய தொடர்பின் பயனைப் பெறுவதற்கு மனமின்றி, வீண்காலம் கழிப்பதுகூடப்பிழைப்பட்ட செயலாகும் என்பது கருத்து.

163. அவமதிப்பும், ஆன்ற மதிப்பும் இரண்டும்,

மிகைமக்க ளான்மதிக்கற் பால; நயமுணராக், கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும், வையார் வடித்த நூலார்.

தாழ்வாக நினைப்பதும், மேலாக நினைப்பதும் ஆகிய இரண்டும் மேன்மக்களாலேயே மதிக்கத்தக்கவை. நற்குணத்தை உணரமாட்டாதவரும், நல்லொழுக்கத்தை மேற்கொள்ளாத வருமான கீழ்மக்களுடைய இழிவான பேச்சையும், சிறப்பித்துப் புகழும், சொற்களையும், தெளிந்தெடுத்த நூற்களைக் கற்றறிந்த பெரியோர்கள் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள்.

‘அற்பரின் பேச்சுப் புகழ்ச்சியானாலும் இகழ்ச்சி யானாலும் அறிவுடையோர் ஒரு பொருட்டாகக் கொள்ள மாட்டார்கள் என்பது கருத்து.

164. விரிநிற நாகம் விடருள தேனும்,

உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்; அருமை உடைய அரண்சேர்ந்தும் உய்யார், பெருமை உடையார் செறின்.

மிகுந்த ஒளியுடைய படத்தைக் கொண்ட பாம்பானது வெடிப்பு நிலத்தினுள்ளே தான் பதுங்கி இருந்தாலும், இடியானது மிகுந்த கோபத்தால் எழுவதுபோன்ற பேரொலியானது நெடுந்தொலைவினின்று எழுந்தாலும், அதனைக் கேட்டு அச்சமடையும். அதுபோலவே, பெருமை உடையவர்கள் சினங்கொண்டால், அதற்கு ஆளானவர் பிறரால் அழிப்பதற்கும் புகுவதற்கும் அருமையுடைய கோட்டை யினுள்ளே பதுங்கியிருந்தாலும், தப்பிப் பிழைக்கவே மாட்டார்கள்.