பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நாலடியார்-தெளிவுரை

அரசர்களுடைய அளவற்ற செல்வ நலத்தையும், பெண்களுடைய அழகின் நன்மையையும், அவர்களை மிகவும் நெருங்கினவர்கள் எவர்களோ அவர்களே அநுபவிப்பார்கள். அதற்கு ஒரு தகுதி வேண்டியதில்லை. எதுபோலவென்றால், நெருக்கமான தளிர்களைக் கொண்டதாகக் கிளைகள் தாழ்ந்து விளங்கும் குளிர்ந்த மரங்கள் எல்லாம், தங்களிடத்திலே அணுகி வந்தவர்களுக்கெல்லாம், தகுதி நோக்காது ஒருப்போலவே நிழல் தருவதுபோன்று என்க.

“பெரியோரும் அனைவரையும் ஒருப்போல ஆதரிப்பவர்; அதனால் அவரையும் ‘எம்மைவிட அவரிடம் அதிக அன்பு காட்டுகின்றனரே என்பது பழிக்க வேண்டாம்; நின் நெருக்கம் போதாது என்று உணர்க” என்பது கருத்து.

168. தெரியத் தெரியும் தெரிவிலார் கண்ணும்

பிரியப், பெரும்படர்நோய் செய்யும்; - பெரிய உலவா இருங்கழிச் சேர்ப்ப! யார் மாட்டும் கலவாமை கோடி யுறும்.

எதனையும் விளக்கமாக அறிந்து தெளிகின்ற தெளிந்த அறிவு இல்லாதவர்களிடத்திலுங்கூடச், சிநேகமானது, பிரிய நேருங்காலத்திலே பெரிதான வருத்தந்தரும் நோயினைச் செய்யும். ஆதலால், பெரிய, வற்றாத கரிய கழிக் கானல்களையுடைய கடற்கரைப் பகுதியின் தலைவனே! எவரிடத்திலும் நட்புடன் கலந்து பழகாமலிருப்பது கலந்தபின் பிரிவதினும் காட்டிலும் கோடிமடங்கு சிறப்புடையதாகும்.

அற்ப அறிவினரைப் பிரியவே அவ்வளவு வருத்தம் ஏற்படும்போது பெரியோரைப் பிரிவது எவ்வளவு துன்பந்தரும்? அதனால் அத்தகையோரிடத்தும் பிழை செய்தல் பிரிவதற்கு ஏதுவுமாகும்; ஆதலால், செய்தல் கூடாதென்பது வலியுறுத்தப்பட்டது.

169. கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்

செல்லாது வைகிய வைகலும், ஒல்வ கொடாஅது ஒழிந்த பகலும், உரைப்பின் படாஅவாம், பண்புடையார் கண்.

கற்க வேண்டிய நூற்களைக் கல்லாது கழிந்து போன நாட்களும், பெரியவர்களிடத்திலே சென்று அவருடைய தொடர்பைப் பெறாது கழிந்த நாட்களும், தம்மால் இயன்றவற்றைக் கொடுத்துத் தருமஞ் செய்யாமற் கழிந்த

f