பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - . - so

நாட்களும், சொல்லப்போனால், நல்ல பண்பு உடையவர்க ளிடத்திலே விளங்காதனவாகும்.

பெரியோர் தொடர்பின் உயர்வைக் காட்டி அவரைப் பிழையாமை கூறப்பட்டது.

170. பெரியோர் பெருமை சிறுதகைமை, ஒன்றிற்கு

உரியார் உரிமை அடக்கம்; - தெரியுங்கால், செல்வம் உடையாரும் செல்வரே, தற்சேர்ந்தார் அல்லல் களைய வெனின்.

‘பெரியோர்’ எனப்படுபவர்களின் பெருமைக்குரிய குணமாவது, அவர்கள் பெருமை பாராட்டாமல் எளிமையைக் காட்டிநிற்கும் பணிவுடைமையேயாகும். கல்வி முதலியவற்றுள் ஏதேனும் ஒன்றிற்கு உரிமையுடையவர்களுக்கு இருக்கவேண்டிய குணம், அதனால் செருக்குக் கொள்ளாமல் அடக்கமுடன் இருப்பதாகும். ஆராய்ந்து ப்ார்த்தால், தம்மைச் சேர்ந்தவர் களின் துன்பங்களை நீக்குவார்களே யானால்தான் பொருள் உள்ளவர்களும் உண்மையிலேயே செல்வர்கள் ஆவார்கள்.

பெரியோர்களின் சிறப்புக்கூறி, அவர்களைப் பழியாமல் உறவு கொள்ள வேண்டுமென்பது விளக்கப்பட்டது.

18. நல்லினம் சேர்தல்

தாம் நல்லவர்களாக நடந்தால் மட்டும்போதாது; தம்மைச் சேர்ந்த அனைவரும் தீயவர்களாயிருந்தால், தம் நல்ல பண்புகளும் விரைவிலே அழிந்துபோம்; தாமும் தீயவர்களாக நேரும். எனவே நல்லவரோடு சேர்ந்து வாழ்தலும் மிகவும் முதன்மையானதாக ஆன்றோரால் கருதப்படும்.

‘உன் நண்பர்கள் யாரென்று சொல்லிவிடு; உன்னைப் பற்றி நானே தெரிந்து கொள்வேன்’ என்று சொல்வார்கள். இனத்தால் ஒருவன் மதிக்கப்படுதல் என்ற உண்மையை இப்படிச் சொல்வதும் வலியுறுத்தும்.

நட்பு ஆராய்தல் போன்று பின்வரும் அதிகாரங்களினும், நல்லினஞ் சேர்தல் என்னுமிது தனியான தன்மை உடையது. நாம் சேர்ந்த நல்ல கூட்டத்திலே அனைவரும் நமக்கு நண்பர்களாகவோ தெரிந்தவர்களாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. ‘இன்னார் இந்த இனத்தைச் சேர்ந்தவர்’ என்ற ஒன்றே, அந்த இனத்திற்குரிய பெருமையைத் தந்துவிடும்.