பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - நாலடியார்-தெளிவு

171. அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி,

நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த நற்சார்வு சாரக், கெடுமே வெயின்முறுகப் புற்பணிப் பற்றுவ டாங்கு. நன்மை தருவது இதுவெனவும், தீமை விளைப்பது இதுவெனவும் அறியவியலாத இளம் பருவத்திலேயே, அடக்கமில்லாத தீயவர்களோடு சேர்ந்து திரிந்தும், முறையில்லாத செயல்களைச் செய்தும் நடந்து வந்த குற்றங்களும், நன்மையான வழியினை அறிந்த நல்லவர்களுடன் சேர்வதனால், வெயிலானது மிகுதியாகப் புல்லின் நுனியிலே யுள்ள பனியை புல்லைவிட்டு நீக்கிவிடுவது போவதுபோல நீங்கிப் போய்விடும். -

‘நல்லினத்தை சேர்வதால் செய்த குற்றங்களும் இல்லாமற் போகும் என்பது கருத்து.

172. அறிமின், அறநெறி, அஞ்சுமின், கூற்றம்,

பொறுமின், பிறர் கடுஞ்சொல், போற்றுமின், வஞ்சம் வெறுமின், வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும் பெறுமின், பெரியார் வாய்ச் சொல்.

எப்பொழுதும் அறநெறியினையே மேற்கொண்டு நடந்து வாருங்கள். கூற்றம் வரும் என்று அஞ்சி நல்லறங்களிலே எப்போதும் ஈடுபடுங்கள். பிறர் கூறுகின்ற கடுமையான சொற்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள். வஞ்சகமான எண்ணங்களை எல்லாம் அறவே விட்டு விடுங்கள். தீய செயல்களிலே ஈடுபடுபவரது தொடர்புகளை வெறுத்து ஒதுக்குங்கள். எப்போதும் பெரியோருடைய வாயினின்று வெளிப்படும் சொற்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

‘பெரியோர் வாய்ச்சொல் பெறுமின்’ என்றதால் நல்லினம் சேர்தல் கூறப்பட்டது.

173. அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும், கேடும்,

உடங்குடம்பு கொண்டார்க்கு உறலால், - தொடங்கிப் ‘பிறப்பின்னாது என்றுணரும் பேரறிவி னாரை உறப்புணர்க, அம்மா, என் நெஞ்சு! நம்முடன் சேர்ந்தவர்களைப் பிரிவதும், தீர்த்தற்கு அருமையான நோய்களும், மரணமும், உடலைப் பெற்றி ருக்கின்றவர்களாகிய நமக்கு ஒருங்கே வந்து சேர்வனவாம்.Mudivu