பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 95

அதனால், மிகப் பழைய காலந்தொட்டு தொடர்ந்து வந்து - கொண்டிருக்கின்ற பிறப்பானது மிகவும் துன்பந்தருவது என்று அறிந்திருக்கிற பேரறிவினை உடையவர்களை என் நெஞ்சமானது உறுதியாகச் சேரக் கடவதாக!

பிறப்பால் வரும் துயரங்களைக் கண்டறிந்து அறவழிகளில் மனஞ்செலுத்தியிருக்கும் சான்றோரைச் சேர்தல் கூறப்பட்டது.

174, இறப்ப நினையுங்கால், இன்னாது எனினும்,

பிறப்பினை யாரும் முனியார் - பிறப்பினுள் பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும் நண்பாற்றி நட்கப் பெறின். ஆராய்ந்து பார்க்குங்காலத்திலே, பிறவி எடுத்தலானது மிகவும் துன்பந்தருவதே என்றாலும், அந்தப் பிறவியினுள்ளும், நல்ல பண்புடையவற்றையே செய்ய வேண்டுமென்னும் உள்ளமுடைய பெரியவர்களோடு எப்போதும் சிநேகத்தைச் செய்து, பிரியாமல் அவருடன் சேர்ந்திருக்கப்பெற்றால், அப்படிப் பிறந்த பிறப்பினையும் இன்னாததென்று எவரும் வெறுக்கமாட்டார்கள்.

‘பெரியவர்களின் தொடர்பால் பிறப்பும் பயன் உடையதாகும் என அவருடைய தொடர்பினைக் கொள்ளலின் சிறப்புக் கூறப்பெற்றது.

175. ஊரங் கணநீர் உரவுநீர்ச் சேர்ந்தக்கால்

பேரும் பிறிதாகித், தீர்த்தமாம்;-ஒரும் குலமாட்சி இல்லாரும் குன்றுபோல் நிற்பர், நலமாட்சி நல்லாரைச் சார்ந்து. ஊரிலுள்ள அங்கணங்களினின்றும் வழிந்து செல்லும் கழிவு நீரானது, சிறப்புப் பொருந்தியதொரு ஆற்று நீருடன் சென்று சேர்ந்த காலத்திலே, அதற்குப் பெயரும் அந்த ஆற்றுநீர் என்று சொல்லப்பட்டு வேறானதாகி அது தீர்த்தமாகவும் மக்களால் கொள்ளப்படும். அப்படியே, ஆராய்ந்து பார்த்தால் தமக்கு இயல்பாக வந்துள்ள குடிப்பெருமை இல்லாதவர் களுங்கூட, நற்குணங்களையுடைய நல்லவர்களான பெரியோரைச் சேர்ந்த காலத்திலே, குன்றுபோலப் பெருமையுடன் விளங்குவார்கள்.

பெரியோரைச் சேர்தலால் வரும் அளவற்ற பெருமை இதன்கண் உரைக்கப்பட்டது.