பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நாலடியார்-தெளிவுரை

19. பெருமை

பெருமை என்பது பெருந்தன்மை என்று பொருள்படும். எந்தக் காலத்தினும் மனத்திலே கலக்கங் கொள்ளாமல் செய்யவேண்டிய அறநெறிகள் முதலியவற்றைச் செய்து, தம் உயர்வை நிலைபெறுத்திக் கொள்ளலாகிய உறுதிப்பாடு இது.

இத்தகைய பெருமைதான் ஒருவனுக்கு வாழ்விலே பலரும் போற்றும் புகழ் வாழ்வையும், தன்னளவிலே தான் சிறந்த பல நல்ல செயல்களைச் செய்தோமென்னும் மன நிறைவையும் தருகின்றது. அதனால், இதனை அடைவதில் மனஞ் செலுத்துவது அனைவரின் கடமை என்பதும் விளங்கும்.

நல்லினஞ் சேர்வதனால் பெருமை வரும்; ஆதலின், அதனைக் கூறிய பின்னர், அப்படிப்பட்ட பெருமையைப் பற்றி அடுத்து விளங்கும் இந்தப் பகுதியை அமைத்துள்ளனர். மன உறுதிப்பாட்டினால் வந்து எய்தும் பெருமையினைப் பற்றி இனி நாம் காண்போம்.

181. ஈதல் இசையாது; இளமைசேண் நீங்குதலால்,

காத லவருங் கருத்தல்லர், காதலித்து, ‘ஆதுநாம்” என்னும் அவாவினைக் கைவிட்டுப் போவதே போலும் பொருள்!

பொருள்வளம் இல்லாத காரணத்தினால், வந்து இரந்தவர்களுக்கு எதுவும் கொடுத்துதவவும் முடியாது; இளமைப் பருவமானது நம்மைவிட்டு நெடுந்தொலைவு போய்விட்டதனால், நம்மேல் முன்பு காதலுடையவராயிருந்த மகளிரும், இப்பொழுது நம்மைக் கருதுதலும் இல்லாதவரா னார்கள்; ஆதலால், அப்படிப்பட்ட பொருளையும் மகளிரையும் விரும்பி நாம் வாழக்கடவோம் என்ற ஆசையினைக் கைவிட்டுத் துறவுநெறியை நாடிப் போவதே இனி நல்ல காரியம் போலும்!

இல்வாழ்வில் பொருள்வளமும், இளமையுமே பெருமை தருவன; அவை நீங்கின காலத்துத் துறவே பெருமை தருவது என்பது கருத்து. -

182. ‘இற்சார்வின் ஏமாந்தேம், ஈங்கமைந்தேம்’

என்றெண்ணிப் பொச்சாந்து ஒழுகுவர், பேதையார்,-அச்சார்வு நின்றன போன்று நிலையா என வுணர்ந்தார், என்றும் பரிவது இலர்.