பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 99

தெளிவான அறிவில்லாதவர்கள், நாம் இல்லறமாகிய வாழ்வினை மேற்கொண்டதனால் களிப்பு அடைந்தோம்; இந்த உலகத்திலே எல்லா வகையாலும் நிறைவு உடையவர்களும் ஆயினோம் என்று எண்ணிப் பின் வருவதை மறந்து நடப்பார்கள். அந்தப் பற்றுகள் எல்லாம் நிலைபெற்றவை போலக் காணப்பட்டுப் பின் நிலைத்திராவாய் அழிந்துபோவன என உணர்ந்த அறிவு உடையவர்கள், எக் காலத்தும் வருத்தம் அடையவே மாட்டார்கள்.

‘இல்வாழ்வின் நிலையாமையான தன்மையை உணர்ந்து இளமையிலேயே துறவுபூண்டு ஒழுகுதல் பெருமை தருவதாகும்’ என்பது கருத்து.

183. மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து,

சிறுமைப் படாதே, நீர் வாழ்மின்-அறிஞராய், நின்றுழி நின்றே நிறம்வேறாம்; காரணம் இன்றிப் பலவும் உள. உலக போகங்களிலே மயக்கம் இல்லாதவர்களாக, உங்களுடைய மறுமை இன்பத்திற்கான நல்ல செயல்களைச் செய்து, ஒரு போதும் சிறுமையான செயல்களிலே ஈடுபடாது, நீங்கள் அறிவுடையவர்களாக வாழ்வீர்களாக ஏனெனில் முன் இருந்த இடத்திலிருந்தே உடலின் நிறமானது பின்னர் வேறுபட்டுப் போய்விடும். அது மட்டுமன்று மாறும்படியான காரணமேதும் இல்லாமலேயே வேறுபல மாறுபாடுகள் உண்டாதலும் ஏற்படும். - -

உடலின் நிலையாமையும் மாறுபாடும் உணர்ந்து, மறுமை இன்பத்தை நாடி, அதற்கான செயல்களிலே ஈடுபடுவதே பெருமை என்பது இது.

184. உறைப்பருங் காலத்தும், ஊற்றுநீர்க் கேணி இறைத்துணினும், ஊராற்றும் என்பர் -

கொடைக்கடனும், சாஅயக் கண்ணும், பெரியார்போன் மற்றையார் ஆஅயக் கண்ணும், அரிது. மழை பெய்தலானது அருகிப் போய்விட்ட காலத்தினும் ஊற்றினால் நீரையுடைய கேணியானது இறைத்துக் குடித்தாலும் ஊரிலுள்ளவர்களைக் காப்பாற்றும் என்பார்கள். அதேபோலத் தானம் செய்தலாகிய கடமையும், வறுமையினால் தளர்ந்து போய்விட்ட காலத்தினுங் கூடப் பெரியோர்களால்

S.