பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 103

அங்ஙனம், முயற்சிகளிலே ஈடுபடுவதற்கும் ஒரு தளராத உறுதிப்பாடு வேண்டும். அந்த முயற்சிகள் சிதறாமலும், இடையே பழுதுபடாமலும், கட்டுப்பாட்டுடன், நிறைவெய்தச் செய்யும் ஆற்றலும் வேண்டும். இத்தகைய ஆற்றலே, “ஆண்மை’ எனச் சிறப்பாகக் கூறப்பட்டது. - 191. கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போற்,

கேளிவ துண்டு, கிளைகளோ துஞ்சுப; வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும் தாளாளர்க் குண்டோ, தவறு?

கொள்ளுவதற்கு உரிய நீரினை, மிகுதியாகக் கொள்ளமாட்டாமற் சிறிதளவே கொள்ளுகின்ற தன்மையினை யுடைய ஒரு குளத்தின் கீழ்ப் பகுதியிலேயுள்ள நெற்பயிரானது, அக்குளத்தில் நீருள்ள மட்டுமே வளமுடன் விளங்கி நீர் வறண்டதும் தானும் வாடிப் போய்விடுவது போல, உறவின் முறையார்கள் கொடுப்பதைப் புசித்துக் கொண்டு, அப்படிக் கொடுப்பவர்களுக்கு ஒர் உறுப்பாக வாழ்பவர்கள், அவர்களுக்கு வறுமை சேர்ந்த காலத்தில் தாமும் வருந்தி மடிவார்கள். அவ்வாறன்றி, வாளின் சுழற்சிபோல் ஆடுகின்ற ஆட்டக்காரிகளின் கண்பார்வை புடை பெயர்ந்து நிற்பதுபோலத் தம் முயற்சியிலே கவனமாய் விழிப்புடன் முயற்சியைக் கையாள்பவர்களுக்குத், தொடங்கிய செயல் நிறைவேறாமற்போவது என்பதும் உண்டோ?

192. ஆடுகோ டாகி அதரிடை நின்றது.உம்,

காழ்கொண்ட கண்ணே, களிறணைக்கும் கந்தாகும், வாழ்தலும் அன்ன தகைத்தே, ஒருவன்றான் தாழ்வின்றித் தன்னைச் செயின். காற்றிலே துவண்டு அசைந்து கொண்டிருக்கிற சிறிய கொம்பினையுடையதாகி வழியிலே நின்ற சிறு செடியும், தான் வயிரங்கொண்டு மரமாகிய காலத்திலே, யானையையும் கட்டும்படியான வலிய கட்டுத்தறியாக விளங்கும். ஒருவன் தன்னைத் தான் நின்ற நிலையினின்றும் கீழ்ப்பட்டுப் போதல் இல்லாமல், தன்னை முயற்சியுடையவனாகச் செய்து கொண்டானானால் அவனுடைய வாழ்க்கையும் அத்தகைய உறுதியினை உடையதாகவே விளங்கும்.

‘அவன் வாழ்விலே முதலில் தளர்வு தோன்றினாலும், நாளடைவிலே அது உறுதியுடையதாகி விடும் என்பது கருத்து.