பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 - நாலடியார்-தெளிவுரை

193. உறுபுலி ஊன்இரை இன்றி ஒருநாள்

சிறுதேரை பற்றியுந் தின்னும்;-அறிவினால்

காற்றொழில் என்று கருதற்க கையினால்

மேற்றொழிலும் ஆங்கே குெம்.

மிகுந்த வலிமையுடைய புலியானது தனக்கு உரிய

இறைச்சியாகிய உணவு இல்லாமல் வருந்தி, ஒருநாள் சிறிய தேரையைப் பற்றித் தின்னவும் செய்யும் ஆனது பற்றி, ஒருவன் தனக்குக் கிடைத்த யாதொரு தொழிலையும் காலாற் செய்வதற்குரிய அற்பமான செயல்தானே யென்று தன் அறிவினால் கருதாமலிருப்பானாக. அவ்விடத்திலேயே, அவனுடைய முயற்சியினால் மேலான தொழிலும் அப்படியே கிடைக்கலாம் அல்லவா?

‘செயல்களை அற்பமென்றும் உயர்வென்றும் கருதாமல் சூழ்நிலைக்கு ஏற்றபடி முயற்சியுடன் செய்பவனே உயர்வடைவான்’ என்பது கருத்து.

194. இசையாது எனினும், இயற்றியோர் ஆற்றால்

அசையாது, நிற்பதாம் ஆண்மை;-இசையுங்கால் கண்டல் திரையலைக்கும் கானலம் தண்சேர்ப்ப; பெண்டிரும் வாழாரோ மற்று?

அலைகள் வந்து தாழைகளை மோதி அசையச் செய்து கொண்டிருக்கும் அழகிய கானற் சோலைகளையுடைய குளிர்ந்த கடற்கரைகளுக்கு உரிய தலைவனே! செய்யத் தொடங்கிய ஒரு செயலானது எளிதிலே கைகூடாது என்றாலும் அதனை ஒருவகையாலும் தளராமல் முயற்சியுடன் செய்து நிலை நிறுத்துவதே ஆண்மையாகும். செய்ய எடுத்த காரியமானது எளிதாக வந்து கைகூடினால் பெண்களுங்கூட அவற்றை எளிதாக நிறைவேற்றி மேன்மை அடைய மாட்டார்களோ?

‘முடியாதெனப் பலரும் சொல்லும் செயலையும் முயற்சியுடன் செய்து முடிக்கும் உறுதியே தாளாண்மை’ என்பது கருத்து.

195. நல்ல குலமென்றும், தீய குலமென்றும்,

சொல்லளவு அல்லாற் பொருளில்லை;-தொல்சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ? தவம், கல்வி, ஆள்வினை, என்றிவற்றான் ஆகும், குலம். நல்ல குலம் எனவும் தீய குலம் எனவும் சொல்லப் படுவதெல்லாம் சொல்லளவாக மாத்திரமே இருப்பதல்லாமல்,