பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் - - 107

‘தன் முயற்சியின்றி இரந்து உண்ணும் உணவினும், தன் முயற்சியால் கிடைக்கும் நீரே சிறப்புடையதாகும்’ என்பது கருத்து.

2. நட்பு இயல்

மனிதன், தனித்து வாழுகின்ற தன்மை உடையவன் அல்லன். ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழுகின்ற பாசம்’ என்ற பிணைப்பினால் பலருடன் கூடி வாழுகின்றவன்தான் மனிதன். அப்படி, மனிதன் கூடிவாழும் குணம் உடையவனாதலால்தான், உலகிலே நாடும் அரசும் என்ற கூட்டு அமைப்புகள் பலவும் எழுந்தன.

இயற்கையிலே இப்படிக் கூடிவாழுகின்ற இயல் புடையவனான மனிதனிடம், அப்படிக் கூடி வாழவேண்டிய ஒரு நெருக்கடியும் இல்லாமற் போகவில்லை.

எதிலும் குறைபாடு உடையவனாக விளங்கும் மனிதன், தன்னிடமுள்ள குறையைப் போக்கிக்கொள்ள மற்றவனின் உதவியை நாடுகிறான். இப்படி அவனும் அடுத்தவனை நாடிச் செல்ல நட்பு என்ற ஒருவகைப் பாச உறவும் வளர்கிறது.

துன்பம் நேர்ந்தவிடத்து உற்றுழி உதவியும், இன்பம் பெருகியவிடத்துக் கூடிக் களித்தும் உதவுவதற்கு நண்பர்கள் வேண்டும். அத்தகைய நண்பர்களிலே, உறவின் முறையாரின் தொடர்பினைப் பற்றிக் கூறுவது இந்தப் பகுதி.

21. சுற்றம் தழால்

‘உறவு முறையார் என்போர், தாய்வழி தந்தை வழி வரும் உறவினர்களும், கொள்வினை கொடுப்பினை பற்றி வரும் உறவினர்களும் ஆவர். பொதுவான நண்பர்களைக் காட்டிலும், இவர்கள் தம்முடைய இயல்பான உறவுப்பிணிப்பின் காரணமாக அதிகமாக நட்புச் செய்வதற்கு உரியவராவர்.

வாய்ப்பும் வளனும் பெற்ற ஒருவன், தான்மட்டும் . இன்புறுவதிலேயோ, அல்லது தன் இல்லத்தவரான மனைவி மக்கள் மட்டும் இன்புறுவதிலேயோ கவனஞ் செலுத்துவது போதாது. அவன், தன்னைச் சேர்ந்த உறவின் முறையினர் எல்லாருமே துன்பத்தின் நீங்கியவர்களாக இருக்கும் வண்ணம், தன்னாலியன்ற அளவுக்கு அவர்களுக்கு உதவியும், அவர்களைக் காத்தும் வருதல் வேண்டும்.