பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 - நாலடியார்-தெளிவுரை

தன் குடும்பம், தன் சுற்றம், தன் நட்பு, தன் ஊர், தன் நாடு என்று படிப்படியாக அகற்சி பெற்றுக் கொண்டே போகும் உறவுப் பிணிப்பிலே, இரண்டாவதாக விளங்குவதுதான் சுற்றம் பேணுதல் ஆகும்.

201. வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்,

கவாஅன் மகன்கண்டு தாய்மறந் தாஅங்கு, அகாஅத் தான்.உற்ற வருத்தம் உசாஅத் தன் கேளிரைக் காணக் கெடும்.

கருவுற்றிருக்கிற காலத்திலே உண்டாகின்ற இயல்பான பலவித நோவுகளையும், அந்த நோவுகளாலும் பிறவற்றாலும் வருகின்ற வருத்தங்களையும், கருவுயிர்த்துக் குழந்தையைப் பெறுகின்ற பிரசவ காலத்தே உண்டாகும் நோவுகளையும், தன் மடியின் மீது தன் மகனை இருத்தியதைக் கண்ட அளவாலேயே ஒரு தாயானவள் மறந்துவிடுவாள். அதனைப் போலவே பலவகையான தளர்ச்சிகளாலும் ஒருவன் அடைந்த துன்பங்கள் எல்லாம், அதனைப்பற்றிக் கேட்கவரும் தன் உறவினரைக் கண்ட அளவானே அவனை விட்டு நீங்கிப் போய்விடும்.

‘மகனைக் கண்டதும், தான் முன்னர் அடைந்த நோவுகளைத் தாய் மறப்பதுபோலவே, உறவினரைக் கண்டதும் ஒருவன் பெற்றிருந்த எல்லா வகைத் தளர்ச்சிகளும் மறைந்துபோகும். அந்த அளவுக்கு உறவுப் பாசம் இருக்க வேண்டும் என்பது கருத்து.

202. அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம்

நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப்-பழுமரம் போல் பல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன். வெயிலானது நெருப்பாகக் காய்கின்ற பொழுதிலே, அந்த வெம்மைக்கு ஆற்றாதவையாகத் தன்னை வந்து அடைந்தவர் களுக்கு எல்லாம், எவ்வித வேறுபாடும் இன்றி ஒரே தன்மையாக நிழல்தந்து உதவிக் காத்து நிற்கின்ற நிழல்தரும் மரத்தைப்போல, உறவினர் வறுமையால் வாடி வெதும்பித் தம்மை வந்து அடைந்தபோது, அவர்கள் அனைவரையுமே, அவர்களுக்குள் எவ்விதமான வேறுபாடுகளும் காட்டாமல் ஒரே சமநிலையிலே தாங்கிக் காத்தல் வேண்டும். அத்துடன் பழங்கள் நிரம்பிய மரத்தைபோலப், பலரும் தன் பயனைப் பெற்று உண்டு களிக்கத்தான் அதனால் வருத்தமுற்றும், அதனைத் தான் பெற்ற